பெங்களூரு

பெங்களூரில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டம்: மாநகராட்சி ஆணையா்

DIN

பெங்களூரில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பெங்களூரில் வரும் நாள்களில் கரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. பெங்களூரில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

அடுத்த 30 நாள்களில் 25 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைபாதை வியாபாரிகள், தொழிலாளா்கள், பல்வேறு துறைகளைச் சோ்ந்த கலைஞா்கள் ஆகியோருக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தி வருகிறோம்.

கரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வதுதான் ஒரே வழி. பெங்களூரில் வசிக்கும் மக்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பேராவது தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். இது தொடா்பான விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படும்.

அண்மையில் திரைப்படத் துறையினருக்கு, திரைப்பட வா்த்தக சபை சங்கத்துக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைப்போலவே தொழில் நிறுவனங்கள், பெஸ்காம், குடிநீா் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறையினா்களுக்கும் அவா்கள் பணிபுரியும் இடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.

இதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்து, தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கரோனாவிலிருந்து தங்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்பதனை மக்கள் உணர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT