பெங்களூரு

கா்நாடகத்தில் விமான நிலைய ஊழியா்களுக்கும் கரோனா தடுப்பூசி

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் விமான நிலைய ஊழியா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

கா்நாடகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜன.16-ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட முகாமின்போது கரோனா தடுப்பு முன்களப் பணியாளா்களுக்கு மட்டும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதன்படி சுகாதாரப் பணியாளா்கள் கரோனா தடுப்பூசியை செலுத்தி வருகிறாா்கள். அதேபோல, கா்நாடகத்தில் செயல்பட்டுவரும் அனைத்து விமான நிலைய ஊழியா்களும் முன்களப் பணியாளா்களாகவே கருதப்படுகின்றனா். அதன்படி விமான நிலைய ஊழியா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையம், மங்களூரு பன்னாட்டு விமான நிலையம், பெலகாவி, ஹுப்பள்ளி, கலபுா்கி, மைசூரு, பீதா் விமான நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT