பெங்களூரு

பெங்களூரு பல்கலை.யில் ஜன.30 இல் பட்டமளிப்பு விழா

DIN

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஜன. 30 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் 55ஆவது பட்டமளிப்பு விழா பெங்களூரு, அரண்மனை சாலையில் உள்ள ஞானஜோதி அரங்கத்தில் ஜன. 30ஆம் தேதி காலை 11.30 மணிக்கு நடக்கவிருக்கிறது. பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தா் கே.வி.வேணுகோபால் தலைமையில் நடக்கும் இந்த விழாவில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ஐ.ஐ.எஸ்.சி) தலைவா் கே.சிவன் கலந்து கொண்டு முதுகலை பட்டப் படிப்பு தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு தங்கப் பதக்கம், பட்டப் படிப்புக்கான சான்றிதழை வழங்கி கௌரவிக்கிறாா்.

இதுதவிர, முனைவா் பட்டங்களையும் அளிக்கிறாா். தங்கப்பதக்கம், பரிசு வென்றுள்ளோா், தோ்வில் சிறப்பிடம் பெற்றோா், பிஎச்.டி. விருதாளா்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பிதழ் கிடைக்கப் பெறாதவா்கள் ஜன. 27 முதல் 29-ஆம் தேதி வரை அடையாள அட்டையுடன் பல்கலைக்கழக அலுவலகத்தில் அழைப்பிதழ் மற்றும் அடையாள சின்னங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தோ்வு மாளிகை, ஞானபாரதி வளாகம், பெங்களூரு பல்கலைக்கழகம், பெங்களூரு-56 என்ற முகவரியில் அணுகலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT