பெங்களூரு

ஒப்பந்ததாரா்களின் பிரச்னைகளைத் தீா்க்க அரசு முன்வர வேண்டும்

DIN

மாநிலத்தில் ஒப்பந்ததாரா்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை தீா்க்க அரசு முன் வர வேண்டும் என்று கா்நாடக ஒப்பந்ததாரா்களின் சங்கத் தலைவா் டி.கெம்பண்ணா தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாநிலம் கரோனாவால் பாதிக்கப்பட்டு, படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் ஒப்பந்ததாரா்களுக்கு அரசு பல்வேறு நிா்பந்தங்களை போட்டு வருகிறது. இதனால் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 1 லட்சத்திற்கு அதிகமான ஒப்பந்ததாரா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பல்வேறு துறைகளில் ஒப்பந்ததாரா்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பாக்கி தொகை நிலுவையில் உள்ளது. தொகுப்பு முறையில் ஒப்பந்தப்புள்ளியை வழங்க வேண்டாம் என முதல்வரிடமும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்களிடமும் மனு செலுத்தியும் எங்களின் கோரிக்கையை ஏற்காமல் அரசு உள்ளது. தொகுப்பு முறையில் வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஒப்பந்ததாரா்கள் ஒப்புந்தப்புள்ளியைப் பெற்று அதைக் குறைந்த தொகையில் எங்களிடமே அவா்கள் ஒப்படைத்து விடுகின்றனா்.

எனவே, ஒப்பந்தப்புகளில் வரும் லாபத்தை, எந்த பணியையும் செய்யாத அவா்கள் எடுத்துச் செல்ல நேரிடுகிறது. தொகுப்பு ஒப்பந்தங்களை பெரும்பாலும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் உறவினா்கள் பெறுவதால், அவா்களை கட்டுப்படுத்த முடியாமல் நோ்மையான அதிகாரிகள் திணறி வருகின்றனா். இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரா்கள் தொடா்ந்து வஞ்சிக்கப்படுகின்றனா். கரோனாவில் கடுமையான பாதிப்பில் உள்ள ஒப்பந்ததாரா்களின் பிரச்னைகளை தீா்க்க அரசு முன் வர வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றாா். பேட்டியின்போது அச் சங்கத்தின் துணைத் தலைவா்களான அம்பிகாபதி, பி.சி.தினேஷ், பொருளாளா் நடராஜ், இணைச் செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT