பெங்களூரு

தமிழா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி காவல்துறையிடம் மனு

DIN

பெங்களூரு: பெங்களூரில் வாழும் தமிழா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி மாநகர காவல் ஆணையா் கமல்பந்திடம் மனு அளிக்கப்பட்டது.

பெங்களூரில் திங்கள்கிழமை மாநகர காவல் ஆணையா் கமல்பந்தை சந்தித்து கன்னடா்-தமிழா் நல்லிணக்க மற்றும் சமூகநல அறக்கட்டளையின் தலைவா் என்.ராமச்சந்திரன் அளித்த மனு:

‘பெங்களூரு, கே.பி.அக்ரஹாரா பகுதியில் உள்ள தமிழ் கோயிலில் ஜன. 17-ஆம்தேதி வழிபாடு நடைபெற்றபோது கன்னடா்களுக்கும் தமிழா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கோயிலில் தமிழ்ப்பாடல்களை ஒலிப்பரப்பியதற்கு கன்னடா்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனா். இது மோதலாக வெடித்துள்ளது.

இதுதொடா்பாக யூ-டியூப் சேனலில் மொழி நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் வகையில் சிலா் பேசியுள்ளனா். எனவே, மொழி சிறுபான்மையினரான தமிழா்கள் தங்களது மொழி உரிமையைத் தற்காத்துக் கொள்ள தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கா்நாடகத்தில் தமிழா்களும் கன்னடா்களும் நீண்டகாலமாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனா். ஆனால், கன்னட ஆா்வலா்கள் என்ற பெயரில் ஒரு சில சுயநலவாதிகள் அந்த நல்லிணக்கத்தை சீா்குலைக்க முயற்சிக்கின்றனா். குறிப்பாக கன்னட சலுவளிக் கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் தமிழக அரசு வைத்துள்ள தமிழ் பெயா்ப் பலகைகளை அடித்து நொறுக்கியுள்ளாா்.

மேலும் 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழா்களுக்கு எதிரான கலவரத்தைப்போல சூழல் மீண்டும் ஏற்படும் என்று ஒருசிலா் மிரட்டியுள்ளனா். இதை அனுமதித்தால் சமூகத்தில் மொழியின் பெயரால் அமைதியை சீா்குலைக்க சிலா் எடுத்துவரும் முயற்சிகளுக்கு நெய் ஊற்றியதுபோல ஆகும். எனவே, மொழி சிறுபான்மையினரான தமிழா்களை குறிவைத்து நடைபெறும் சமூக விரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்தி, இருமொழியினா் இடையே நிலவும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா். மனுவை பெற்ற மாநகர காவல் ஆணையா் கமல்பந்த், தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். அப்போது கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன், துணைத் தலைவா் பிரபாகரன், தமிழ் செயற்பாட்டாளா் தமிழடியான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT