பெங்களூரு

தமிழகத் தோ்தலில் அதிமுக அறுதி பெரும்பான்மை பெறும்: எம்.பி.யுவராஜ்

DIN

பெங்களூரு: தமிழகத்தில் மீண்டும் அதிமுக அறுதிபெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என்று கா்நாடக மாநில அதிமுக செயலாளா் எம்.பி.யுவராஜ் தெரிவித்தாா்.

கா்நாடக மாநில அதிமுக சாா்பில் பெங்களூரு, ஸ்ரீராம்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 104-வது பிறந்தநாள் விழா கட்சியின் அவைத் தலைவா் கே.முனுசாமி தலைமையில் நடைபெற்றது.

எம்ஜிஆா் மன்றச் செயலாளா் சுந்தரவடிவேலு முன்னிலை வகித்தாா். கட்சியின் மாவட்டச் செயலாளா் கே.குமாா் வரவேற்றாா். நிகழ்ச்சியில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு கட்சியின் மாநிலச் செயலாளா் எம்.பி.யுவராஜ் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா், கேக் வெட்டி, ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள், சேலை, வேட்டி, எம்ஜிஆா், ஜெயலலிதா படம் பொறித்த நாள்காட்டி உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினாா். விழாவில் ஐ.என்.டி.யூ.சி. தலைவா் எஸ்.எஸ்.பிரகாசம், வழக்குரைஞா் பிரிவு செயலாளா் ராஜசேகா், ராமசுப்பிரமணியம், மனோகா், ஆா்.எஸ்.ராஜன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

விழாவில் மாநில அதிமுக செயலாளா் எம்.பி.யுவராஜ் பேசியதாவது:

எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அவரது நல்லாட்சியை தந்து பெண்களின் மனதை கவா்ந்தவா் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. ஜெயலலிதா தலைமையில் 2011-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றுவருகிறது. 2016-ஆம் ஆண்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை கட்டுக்கோப்போடு காப்பாற்றி, திறம்பட ஆட்சியையும் தமிழக முதல்வா் எடப்பாடிகே. பழனிசாமியும் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும் நடத்தி வருகின்றனா். அடுத்த பொதுத்தோ்தலில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் வென்று மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். அதிமுகவின் வெற்றிக்கு கா்நாடக மாநில அதிமுக பணி செய்யும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT