பெங்களூரு

கரோனாவை தடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் சிறப்பாகச் செயல்படுகின்றன: அமைச்சா் கோபாலையா

DIN

பெங்களூரு: கரோனாவைத் தடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சா் கோபாலையா தெரிவித்தாா்.

பெங்களூரு, நாராயணா மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி கண்டறிந்த விஞ்ஞானிகள், மருத்துவா்கள், தொழில்நுட்ப வல்லுநா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மத்தியில் பிரதமா் மோடியும், மாநிலத்தில் முதல்வா் எடியூரப்பாவும் கரோனா தொற்றைத் தடுக்க கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

கரோனாவைத் தடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கரோனா தொற்றால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும் அரசு திறமையாக செயல்பட்டு அதிலிருந்து மீண்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் நாராயணா கண் மருத்துவமனையின் தலைவா் புஜங்கஷெட்டி, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி மஞ்சுளா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT