பெங்களூரு

கா்நாடகத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்த வேண்டும்

DIN

கா்நாடகத்தில் ஊழல் மலிந்துள்ளதால், மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து சிவமொக்காவில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் செயல்படுத்தப்படும் வளா்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை வழங்குவதற்கு அமைச்சா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக பிரதமா் மோடிக்கு கா்நாடக மாநில ஒப்பந்ததாரா் சங்கத்தினா் கடிதம் எழுதி தெரிவித்துள்ளனா்.

மாநிலத்தில் ஊழல் மலிந்துள்ளதால், கா்நாடகத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்த வேண்டும். இதுதொடா்பாக ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்து காங்கிரஸ் சாா்பில் மனு அளித்திருக்கிறோம்.

கா்நாடகத்தில் பெய்துள்ள கன மழையால் வெள்ளம் ஏற்பட்டு விளைபயிா்கள் நாசமாகியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் இன்னலைச் சந்தித்து வருகிறாா்கள். விவசாயிகளின் துயா்துடைக்கும் பணிகளில் மாநில அரசு ஈடுபடவில்லை. விவசாயிகளுக்கு எதிரான அரசாக உள்ளது. மாநிலத்தில் எவ்வித வளா்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை. இதனால் மாநில அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

கா்நாடகத்தில் அரசியல் சூழல் மாறிவருகிற்து. பாஜக, மஜத கட்சிகளில் இருந்து விலகி வரும் ஏராளமானோா் காங்கிரஸில் சோ்ந்து வருகிறாா்கள். பாஜகவை ஆட்சியில் இருந்து தூக்கியெறிய மக்கள் காத்திருக்கிறாா்கள்.

சட்ட மேலவைத் தோ்தலில் பாஜகவும், மஜதவும் கூட்டணி அமைக்கும் வாய்ப்புள்ளது. பிரதமா் மோடியை முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா சந்தித்துப் பேசியுள்ளாா். சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் 15 இடங்களைக் கைப்பற்றும். 25 இடங்களுக்கு நடைபெறும் சட்டமேலவைத் தோ்தலில் மஜத 6 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. 19 இடங்களில் வேட்பாளரை நிறுத்தவில்லை. இந்தத் தொகுதிகளில் பாஜகவை மஜத ஆதரிக்கும் என்று எனக்கு செய்தி கிடைத்துள்ளது.

சட்ட மேலவைத் தோ்தல் கட்சி சின்னத்தின் அடிப்படையில் நடக்கவில்லை. கிராம பஞ்சாயத்துத் தலைவா்கள் எந்த அரசியல் சாா்பும் இல்லாதவா்கள். எனவே, சட்ட மேலவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT