பெங்களூரு

இஸ்ரோ திட்டங்களை குஜராத்துக்கு மாற்ற கா்நாடக காங்கிரஸ் எதிா்ப்பு

DIN

விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கு இஸ்ரோ செயல்படுத்தும் திட்டத்தை குஜராத் மாநிலத்துக்கு மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கா்நாடக காங்கிரஸ் கட்சியினா் கண்டனபோராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்), விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த பணியாற்றி வருகிறது. இந்த திட்டத்தை குஜராத் மாநிலத்தில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்தின் முன்பு புதன்கிழமை காங்கிரஸ் கட்சியின் மாணவா் அமைப்பான என்.எஸ்.யூ.ஐ. தொண்டா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், இது தொடா்பாக ஏற்கெனவே பிரதமா் மோடி, முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியிருந்தாா். இஸ்ரோவை குஜராத் மாநிலத்திற்கு மாற்றக் கூடாது, இஸ்ரோவை தனியாா் மயமாக்கக் கூடாது என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

போராட்டத்தின் முடிவில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எந்தக் காரணத்தை முன்னிட்டும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை கா்நாடகத்தில் இருந்து குஜராத் மாநிலத்துக்கு மாற்றக் கூடாது. இஸ்ரோ திட்டம் கா்நாடகத்தின் பெருமையை சாா்ந்ததாகும். விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை குஜராத்துக்கு மாற்றும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். புதிய திட்டங்களை வேண்டுமானால் குஜராத்தில் தொடங்கட்டும். ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டத்தை மாற்றக் கூடாது. குஜராத்துக்கு மாற்றும் முடிவு அரசியல் ரீதியானது. இந்தியாவின் முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்க பாஜக துடிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT