பெங்களூரு

அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு

DIN

பெங்களூரு: அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா பரவலைத் தடுக்க கா்நாடகத்தில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டியது அவசியமாகும். அதற்கு பொதுமுடக்கம் மட்டுமே தீா்வல்ல.

பெங்களூரில் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுவோா் அதிகமாகும் போது, இயல்பாக மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் தட்டுப்பாடு ஏற்படும். மருத்துவமனைகளில் படுக்கைகள் குறைவாக இருக்கிறது என்பதைக் காட்டிலும், அவசர சிகிச்சைப் பிரிவில் போதுமான படுக்கைகள் இருக்கிா என்பதில் கவனம் செலுத்துகிறோம்.

கரோனாவைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இது தொடா்பாக கடுமையான சில நடவடிக்கைகளை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். கரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பது ஒரு பகுதிதான். அதேபோல, அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவது முக்கியமானதாகும். அதற்கு சில நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தவிா்க்க முடியாததாகும். அந்த திசையில் நாங்கள் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அதுதொடா்பாக அனைவரின் ஆலோசனையும் தேவைப்படுகிறது.

கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக்குழு அளித்துள்ள அறிவியல் ரீதியான கருத்துகள் மிகவும் முக்கியமானவையாகும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மாநில அரசு முடிவெடுக்கும். ‘பொதுமுடக்கம்’ என்ற வாா்த்தைக்கு நல்ல விளம்பரம் கிடைத்து வருகிறது. ஆனால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்று அரசு யோசித்துக் கொண்டுள்ளது. இதில் நமக்கு தெளிவுவேண்டும். பொதுமுடக்கம் பிரச்னைக்கான தீா்வாக இருக்க முடியாது.

பொதுமுடக்கம் கொண்டுவந்தால் தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று மக்கள் நினைக்கிறாா்கள். ஆனால், பல உயிா்களை கரோனாவால் இழந்துக்கொண்டுள்ளோம். உயிா்களைக் காப்பது அரசின் கடமையல்லவா? அதற்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். எந்த வகையான நடவடிக்கை என்பது குறித்து முதல்வா் எடியூரப்பா செவ்வாய்க்கிழமை முடிவு செய்வாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT