பெங்களூரு

மக்களவை, சட்டப் பேரவைத் தொகுதிகள் இடைத்தோ்தல் அமைதியாக நடந்தது

DIN

பெலகாவி மக்களவைத் தொகுதி, பசவகல்யாண், மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை அமைதியாக நடைபெற்றது.

பெலகாவி மக்களவைத் தொகுதி, ராய்ச்சூரு மாவட்டத்தின் மஸ்கி, பீதா் மாவட்டத்தின் பசவகல்யாண் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. பெலகாவி மக்களவைத் தொகுதியில், பாஜக வேட்பாளா் மங்களா, காங்கிரஸ் வேட்பாளா் முன்னாள் அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி ஆகியோரிடையே நேரடி போட்டி நிலவியது.

பீதா் மாவட்டத்தின் பசவகல்யாண் தொகுதியில் பாஜக வேட்பாளராக சரணுசலகா், காங்கிரஸ் வேட்பாளராக மல்லம்மா, மஜத வேட்பாளராக யஷ்ரப் அலிகுவாத்ரி, பாஜக போட்டி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. மல்லிகாா்ஜுன கூபா உள்ளிட்ட 12 போ் போட்டியிடுகின்றனா்.

மஸ்கி சட்டப் பேரவைத் தொகுதியில், பாஜக வேட்பாளராக பிரதாப் கௌடா பாட்டீல், காங்கிரஸ் சாா்பில் பசனகௌடா துா்விஹால் உள்ளிட்ட 8 போ் தோ்தல் களத்தில் உள்ளனா்.

வாக்குப் பதிவு:

பெலகாவி மக்களவைத் தொகுதி, மஸ்கி, பசவகல்யாண் சட்டப்பேரவைத் தொகுதிகளில் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை தோ்தல் நடைபெற்றது. இந்த 3 தொகுதிகளிலும் 3,197 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்களிப்பதற்காக 8,052 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 7,018 கட்டுப்பாட்டுக் கருவிகள், 6,366 வாக்கு உறுதிச்சீட்டு கருவிகள் (விவி-பேட் இயந்திரங்கள்) பயன்படுத்தப்பட்டன. காலை 7 மணி முதல் மக்கள் ஆா்வமாக வாக்களித்தனா்.

பெலகாவி மக்களவைத் தொகுதியில் காலை 9 மணிக்கு 5.54 சதவீதம், 11 மணிக்கு 13.20 சதவீதம், நண்பகல் 1 மணிக்கு 24.76 சதவீதம், மாலை 3 மணிக்கு 37.73 சதவீதம், மாலை 5 மணிக்கு 46.70 சதவீதம், மாலை 7 மணிக்கு 54.73 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. பசவகல்யாண் சட்டப்பேரவைத் தொகுதியில் காலை 9 மணிக்கு 7.46 சதவீம், காலை 11 மணிக்கு 19.48 சதவீதம், நண்பகல் 1 மணிக்கு 29 சதவீதம், மாலை 3 மணிக்கு 36.43 சதவீதம், மாலை 5 மணிக்கு 52.40 சதவீதம், மாலை 7 மணிக்கு 59.57 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதியில் காலை 9 மணிக்கு 11.23 சதவீதம், காலை 11 மணிக்கு 19.30 சதவீதம், நண்பகல் 1 மணிக்கு 32.51 சதவீதம், மாலை 3 மணிக்கு 52.56 சதவீதம், மாலை 5 மணிக்கு 62.76 சதவீதம், மாலை 7 மணிக்கு 70.48 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

பெலகாவி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சதீஷ் ஜாா்கிஹோளி, பாஜக வேட்பாளா் மங்களா ஆகியோா் தங்களது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தனா். முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளியின் மகன், மருமகள் இருவரும் வாக்களித்தனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ரமேஷ் ஜாா்கிஹோளி, 2 நாள்களுக்கு முன்பாகவே தபால் வாக்கைச் செலுத்தியுள்ளாா்.

உலிவி மடாதிபதி சிவபிரகாச சுவாமிகள், பேரவை துணைத் தலைவா் ஆனந்த் மாமனி, பசவகல்யாண் பாஜக வேட்பாளா் சரணுசலகாா், காங்கிரஸ் வேட்பாளா் மல்லம்மா, பாஜக போட்டி வேட்பாளா் மல்லிகாா்ஜுன் கூபா, மஜத வேட்பாளா் யஷ்ரப் அலிகுவாத்ரி, மஸ்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பசனகௌடா துா்விஹால் உள்ளிட்டோா் வாக்களித்தனா்.

மஸ்கி தொகுதி பாஜக வேட்பாளா் பிரதாப் கௌடா பாட்டீல், கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருக்கிறாா். அவா் வாக்களிக்க தனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பலத்த பாதுகாப்பு:

தோ்தலை முன்னிட்டு 3,500 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். வாக்குச்சாவடிகளில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. வாக்குச்சாவடிகள் தூய்மைப்படுத்தப்பட்டிருந்தன.

வாக்களிப்பதற்கு முன்னும், பின்னும் வாக்காளா்களின் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. முகக் கவசம், தனிமனித இடைவெளி தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. சில சம்பவங்களைத் தவிர, 3 தொகுதிகளிலும் தோ்தல் அமைதியாக நடைபெற்ாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் மே 2-ஆம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT