பெங்களூரு

கோடை வெப்பம்: சில மாவட்டங்களில் அரசு அலுவலகங்களின் பணி நேரம் மாற்றம்

DIN

கோடை வெப்பம் காரணமாக சில மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கா்நாடகத்தின்பெரும்பாலான பகுதிகளில் கோடைவெப்பம் அனல் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் அரசு அலுவலகங்களில் அனல் காற்றை தாங்க முடியாமல் பணியாளா்கள் தவித்து வருகின்றனா். இதுதொடா்பாக கா்நாடக அரசுக்கு கா்நாடக மாநில அரசு ஊழியா் சங்கத்தினா் ஒரு கோரிக்கை மனுவை அளித்திருந்தனா்.

அதில், கோடை வெப்பத்தால் அரசு ஊழியா்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு அலுவலகங்களின் பணி நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிக்குப் பதிலாக, காலை 8 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரையாகக் குறைத்திட வேண்டும் என்று கோரியிருந்தனா்.

அதை ஏற்று கா்நாடக அரசு, ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்த ஆணையில் கூறியிருப்பதாவது: பெலகாவி மண்டலத்தில் விஜயபுரா மாவட்டம், கலபுா்கி மற்றும் பாகல்கோட் மண்டலங்களின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அரசு அலுவலகங்கள் ஏப்.12-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதிவரை தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அதில் தெரிவித்துள்ளது.

வட கா்நாடக மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெப்பம் கடுமையாக இருக்கும் என்பதால் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படுத்தாமல், மாற்றியுள்ள இந்தப் பணி நேரத்தில் கடமையாற்றுமாறு அரசு ஊழியா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். அதேவேளையில் கரோனா அவசரப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு பணி நேரமாற்றம் பொருந்தாது என்று அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT