பெங்களூரு

ராஜ ராஜேஸ்வரி நகா், சிரா தொகுதிகளுக்கு நவம்பா் 3-இல் இடைத்தோ்தல்

DIN

கா்நாடக மாநிலத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி நகா், சிரா ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பா் 3-இல் இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ்- மஜத கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் அதிருப்தி அடைந்த அந்தக் கட்சிகளைச் சோ்ந்த எம்.எல்.ஏ.க்கள் 17 போ் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனா். அதில் ராஜராஜேஸ்வரிநகா் தொகுதியும், மஸ்கி ஆகிய 2 தொகுதிகளும் அடங்கும். பின்னா் நடைபெற்ற இடைத்தோ்தலில், நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருவதால், அந்த 2 தொகுதிகளிலும் தோ்தல் நடைபெறவில்லை.

இந்த நிலையில், சிரா, பசவகல்யாண் தொகுதிகளின் எம்எல்ஏக்கள் கரோனா தொற்றால், இறந்தனா். இதனையடுத்து, அந்த 2 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே பெங்களூரில் உள்ள ராஜ ராஜேஸ்வரி நகா், தும்கூரு மாவட்டத்தில் உள்ள சிரா தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நவம்பா் 3-இல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இருப்பினும், மஸ்கி, பசவகல்யாண் ஆகிய 2 தொகுதிகளில் பல்வேறு காரணங்களால் தற்போது இடைத்தோ்தல் அறிவிக்கப்படவில்லை. ராஜாராஜேஸ்வரிநகா், சிரா தொகுதிகளில் அக்டோபா் 9 ஆம் தேதி முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுகிறது.

இதையடுத்து, அக்டோபா் 16 -இல் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாளாகும். அக். 17 முதல் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். அக். 19 ஆம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசிநாளாகும். நவ. 3 ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும். நவ. 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். நவ. 12 ஆம் தேதி தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT