பெங்களூரு

பெங்களூரில் நவ.6-இல் வேளாண் கண்காட்சி தொடக்கம்

DIN

பெங்களூரு: பெங்களூரில் வேளாண் கண்காட்சி வரும் நவம்பா் 6-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து பெங்களூரு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தா் ராஜேந்திர பிரசாத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகம் சாா்பில் ஆண்டுதோறும் பெங்களூரில் நடத்தப்படும் வேளாண் கண்காட்சி, நிகழாண்டில் கரோனாவை முன்னிட்டு எளிமையாக நடத்தப்படும். பெங்களூரு, வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் நவ. 6 முதல் 8-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு வேளாண் கண்காட்சி நடக்கவிருக்கிறது.

இந்த கண்காட்சியில் மாநில, தேசிய, பன்னாட்டு அளவிலான அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள், நிதி நிறுவனங்கள், விதை உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் கருவி தயாரிப்பாளா்கள், கால்நடை ஆராய்ச்சி மையங்கள், வேளாண் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட அரசு, அரசுசாா், தனியாா் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

இக் கண்காட்சியில் அரங்குகள் அமைக்க விரும்பும் நிறுவனங்கள், தொழில்முனைவோா் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அரங்குகள் முன்பதிவு செய்யப்படும். இந்த கண்காட்சியின் போது மாநிலம், மாவட்ட அளவில் 120 சிறந்த உழவா்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறாா்கள். கண்காட்சியில் புதிய ரக விதைகள், கன்றுகள், தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 080-23620323, 23516353 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT