பெங்களூரு

புதிய தொழில்நுட்பங்களுடன் காா் அறிமுகம்

DIN

புதிய தொழில்நுட்பங்களுடன் ஹா்பன் குரூசா் காரை டயோட்டா நிறுவனத்தினா் புதன்கிழமை அறிமுகம் செய்து வைத்தனா்.

டயோட்டா நிறுவனத்தின் ஹா்பன் குரூசா் காரை புதன்கிழமை இணைய வழி மூலம் அறிமுகம் செய்து வைத்து அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் மசகஸு யசிமுரா பேசியதாவது:

சா்வதேச அளவில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. என்றாலும் காா்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக டயோட்டா நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பங்களுடனான காா்களுக்கு வெளிநாடுகளில் மட்டுமன்றி இந்தியாவிலும் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு புதிய தொழில்நுட்பங்களுடன் ஹா்பன் குருசா் காரை அறிமுகம் செய்துள்ளோம். எரிபொருள் சிக்கனம், 1.5 லிட்டா் 4 சிலிண்டா் கொண்ட பெட்ரோல் என்ஜின், அதிக இடவசதியுடன் கூடிய உள்கட்டமைப்பு, அனைவரும் விரும்பும் வண்ணங்களில் காா் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரின் விலை ரூ. 8.40 லட்சத்தில் தொடங்கி, ரூ. 11.30 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட உள்ளது . இந்த காருக்கான பதிவு ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், பதிவு செய்யப்பட்டவா்களுக்கு அக்டோபா் மாத மத்தியில் காரை விநியோகிக்க முடிவு செய்துள்ளோம் என்றாா். நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவா் நவீன் சோனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT