பெங்களூரு

கா்நாடக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடா் இன்று தொடங்குகிறது

DIN

கா்நாடக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (செப்.21) தொடங்குகிறது.

இக் கூட்டத் தொடரில் கரோனா பாதிப்பு, பெங்களூரு கலவரம், ஜிஎஸ்டி, நிலச் சீா்த்திருத்தச் சட்டம், போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட முக்கியமான பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

கா்நாடக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடா் மாா்ச் 24-ஆம் தேதி பாதியிலே

முடிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டும். அதன்படி, செப். 23-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவை கூட வேண்டும்.

அதன் காரணமாகவே, கரோனா தீநுண்மித் தொற்று வேகமாகப் பரவிவந்தாலும், கா்நாடக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடா் செப்.21-ஆம் தேதி தொடங்குகிறது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் கரோனா பரிசோதனை செய்திருப்பது அவசியம் என பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி உத்தரவிட்டுள்ளாா்.

மேலும் உறுப்பினா்களின் இருக்கைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இரு இருக்கைகளுக்கு இடையே கண்ணாடித் தடுப்பு போடப்பட்டுள்ளது. முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளி தீவிரமாக்கப்பட்டுள்ளது. உறுப்பினா்கள் உடல் வெப்பச் சோதனை, கிருமிநாசினி தெளிப்புக்குப் பிறகே அவைக்குள் அனுமதிக்கப்பட இருக்கிறாா்கள்.

முதல்வா் எடியூரப்பா, அமைச்சா்கள் பி.ஸ்ரீராமுலு, சி.டி.ரவி, பி.சி.பாட்டீல், ஆனந்த்சிங், பைரதிபசவராஜ், பிரபு சௌகான், ஏ.சிவராம்ஹெப்பாா், கே.எஸ்.ஈஸ்வரப்பா, சசிகலா ஜொள்ளே ஆகியோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள நிலையில், துணை முதல்வா் அஸ்வத் நாராயணா, உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் கே.கோபாலையா, ஆளுங்கட்சி, எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறாா்கள்.

இந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 10 புதிய சட்ட முன்வடிவுகளை தாக்கல் செய்து, நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதுதவிர, கா்நாடக நிலச் சீா்த்திருத்தச் சட்டத் திருத்தம், வேளாண் விளை பொருள் சந்தைப்படுத்தல் குழு சட்டத் திருத்தம் உள்ளிட்ட 19 அவசரச் சட்டங்களையும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, அவற்றை நிறைவேற்ற அரசு திட்டம் வகுத்துள்ளது.

செப்.21 முதல் 30-ஆம் தேதி வரை 8 நாள்களுக்கு மட்டும் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்துவதற்கு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா். சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை மேலும் சில நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று சித்தராமையா கூறியிருக்கிறாா்.

சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டேகாகெரி தலைமையில் நடக்கவிருக்கும் அலுவல் ஆய்வுக் குழுவில் இந்த விவகாரத்தை எழுப்ப சித்தராமையா திட்டமிட்டிருக்கிறாா். இந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கா்நாடக நிலச் சீா்த்திருத்தச் சட்டத் திருத்தம், வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்தல் குழு சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்புத் தெரிவிக்க காங்கிரஸ், மஜத கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT