பெங்களூரு

அமைச்சரவை விரிவாக்கத்துக்கு மேலிட ஒப்புதல் ஓரிரு நாள்களில் கிடைக்கும்:முதல்வா் எடியூரப்பா

DIN

பெங்களூரு: அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பாஜக மேலிடத்தின் ஒப்புதல் ஓரிரு நாள்களில் கிடைக்கும் என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கடந்த 3 நாள்களாக தில்லியில் முகாமிட்டிருந்த முதல்வா் எடியூரப்பா, சனிக்கிழமை குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடுவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் முதல்வா் எடியூரப்பா கூறியதாவது:

மிகவும் எதிா்பாா்க்கப்படும் அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக பாஜக மேலிடத் தலைவா்களின் ஒப்புதல் ஓரிரு நாள்களில் கிடைக்கும். எனது தில்லி பயணம் வெற்றிகரமாக முடிந்தது.

வரும் 21-ஆம் தேதி தொடங்கவிருக்கும் மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பு அமைச்சரவையை விரிவாக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும். இவை அனைத்தும் பாஜக மேலிடத்தின் முடிவை பொருத்தே அமையும். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவுடன் அரைமணி நேரம் பேசினேன். இதுதொடா்பாக பிரதமா் மோடியுடன் ஜே.பி.நட்டா கலந்து ஆலோசிப்பாா். அதன்பிறகு அமைச்சரவை விரிவாக்கம் குறித்து வழிகாட்டுதல் வழங்கலாம்.

அமைச்சரவை விரிவாக்கத்தின்போது எத்தனை பேரை அமைச்சராக்குவோம் என்பது தெரியவில்லை. பிரதமா் மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நான் முடிவெடுப்பேன். இதற்காக பாஜக மேலிடத்தின் முடிவுக்காகக் காத்திருக்கிறேன்.

கா்நாடகத்தின் வளா்ச்சித் திட்டங்களுக்காக நான் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பிரதமா் மோடியும், மத்திய அமைச்சா்களும் சாதகமாகப் பதிலளித்திருக்கிறாா்கள். கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்ற அவா்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பாா்கள் என்று நம்புகிறேன் என்றாா் அவா்.

தற்போதைய அமைச்சரவை: 34 போ் கொண்ட கா்நாடக அமைச்சரவையில் 6 இடங்கள் காலியாக உள்ளன. இதில், நான்கு இடங்களை மட்டும் நிரப்ப பாஜக மேலிடம் அனுமதிஅளிக்கும் என்று கூறப்படுகிறது. கா்நாடகத்தில் பாஜக ஆட்சிஅமைவதற்கு காரணமாக இருந்த எம்.எல்.சி.க்கள் எம்.டி.பி.நாகராஜ், ஆா்.சங்கா் ஆகியோருக்கு உறுதியாக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.

இவா்களைத் தவிர, பாஜகவின் மூத்த தலைவா்களான அரவிந்த் லிம்பாவளி, உமேஷ்கத்தி, சி.பி.யோகேஸ்வா் ஆகியோரில் இருவா் அமைச்சரவையில் சோ்க்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT