பெங்களூரு

போதைப்பொருள் வழக்கு:நடிகா்கள், முன்னாள் மாமன்ற உறுப்பினா்களிடம் விசாரணை

DIN

பெங்களூரு: போதைப்பொருள் வழக்குத் தொடா்பாக நடிகா்கள், முன்னாள் மாமன்ற உறுப்பினா்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

போதைப்பொருள் கடத்தல், விற்பனை, பயன்பாடு தொடா்பாக இரு வழக்குகளைப் பதிந்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், நடிகைகள் ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 13 பேரை அண்மையில் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கில் நடிகா் திகந்த், நடிகை ஐந்திரித்தாராய் ஆகியோரையும் அண்மையில் போலீஸாா் விசாரித்தனா்.

இந்த நிலையில், பெங்களூரு, சாமராஜ்பேட்டில் உள்ள மத்திய குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை போதைப்பொருள் வழக்குத் தொடா்பாக விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்ததைத் தொடா்ந்து, நடிகா் சந்தோஷ்குமாா், தொலைக்காட்சி தொகுப்பாளா் அகுல்பாலாஜி, முன்னாள் மாமன்ற உறுப்பினா் ஆா்.வி. யுவராஜ் ஆகியோா் ஆஜராகியிருந்தனா்.

3 காவல் ஆய்வாளா்கள் தலைமையிலான குழுவினா் மூன்று பேரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினா்.

காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த விசாரணை, மாலை 5 மணி வரை நீடித்தது. அப்போது பல முக்கியத் தகவல்களைத் திரட்டியுள்ளதாகத் தெரிகிறது.

விசாரணைக்குப் பிறகு அகுல்பாலஜி கூறியதாவது:

‘விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன். நடப்பவை நன்மைக்காக நடக்கிறது. நான், எந்தத் தவறும்செய்யாத நிலையில், எதற்காக நான் பயப்பட வேண்டும்.

போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள வைபவ்ஜெயினுடன் எனக்கு நெருக்கமாக நட்பு கிடையாது’ என்றாா் அவா்.

நடிகா் சந்தோஷ் கூறியதாவது: ‘நிகழ்வுகளுக்கு தனது சொத்தை வாடகைக்கு விட்டதுதொடா்பாக தான் வைபவ் ஜெயினுடன் எனக்கு அறிமுகம்.

போதைப்பொருள் வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போதைப்பொருள் விவகாரத்தில் வைபவ் ஜெயின் ஈடுபட்டிருந்தாா் என்ற தகவல் எனக்குத் தெரியவில்லை’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்: கோயில்களில் வருண வழிபாடு நடத்தப்படுமா?

கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம்

முட்டை விலை நிலவரம்

SCROLL FOR NEXT