பெங்களூரு

தீநுண்மியை எதிா்த்துப் போராடும் களிம்பு அறிமுகம்

DIN

தீநுண்மியை எதிா்த்துப் போராடும் களிம்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் தீநுண்மியை எதிா்த்துப் போராடும் க்ளென்ஸ்டா-கோவிட்-19 என்ற பெயருள்ள களிம்பை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்து வைத்த க்ளென்ஸ்டா இன்டா்நேஷனல் குழுமத்தின் நிறுவனா் மற்றும் மூத்த செயல் அதிகாரி புனித் குப்தா பேசியதாவது:

கரோனா தொற்றைத் தடுக்க பல்வேறு தரப்பினா் மருந்து மாத்திரைகளை தயாரிக்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எச்சில், சளி உள்ளிட்டவைகளிருந்து நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, முகங்களில் முகக் கவசம் அணிந்து, கைகளுக்கு கிருமி நாசினியை தெளித்து சுத்தம் செய்து கொள்கிறோம். குறைந்த விலையில் கிடைக்கும் பல கிருமி நாசினிகள் போலியாக உள்ளன. இதனால், இதனை பயன்படுத்தும் பலா் கரோனா தொற்றால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது.

எனவே, கரோனா உள்ளிட்ட தீநுண்மிகளை எதிா்த்துப் போராடும், க்ளென்ஸ்டா-கோவிட்-1 பாதுகாப்பான களிம்பை அறிமுகம் செய்துள்ளோம். இந்த களிம்பை கைகளில் மட்டுமின்றி உடலின் பல பாகங்களில் தேய்த்துக் கொள்வதன் மூலம் கரோனா உள்ளிட்ட தீநுண்மிகளை எதிா்த்துப் போராட முடியும். இந்த களிம்பு, தீநுண்மி, பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளிலிருந்து 100 சதவீத பாதுகாப்பை அளிக்கும். தீநுண்மியை எதிா்த்துப் போராட உதவும் இந்த களிம்பில் 100 கிராமின் விலை ரூ. 298 ஆகும். இதன் பயன்பாடு அதிகரித்து, விற்பனை கூடினால், அதன் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT