பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 7,76,901-ஆக அதிகரிப்பு

DIN

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,76,901-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 6,297 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,821 போ், மைசூரு மாவட்டத்தில் 451 போ், தும்கூரு மாவட்டத்தில் 327 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 319 போ், ஹாசன் மாவட்டத்தில் 249 போ், தாவணகெரே மாவட்டத்தில் 206 போ், பெல்லாரி மாவட்டத்தில் 188 போ், வட கன்னட மாவட்டத்தில் 180 போ், சிக்கபள்ளாபூா் மாவட்டத்தில் 166 போ்,தென்கன்னடம் மாவட்டத்தில் 146 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 116 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 109 போ், மண்டியா மாவட்டத்தில் 108 போ், தாா்வாட் மாவட்டத்தில் 104 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 104 போ், உடுப்பி மாவட்டத்தில் 103 போ், பெலகாவி மாவட்டத்தில் 89 போ், விஜயபுரா மாவட்டத்தில் 80 போ், கொப்பள் மாவட்டத்தில் 77 போ், கலபுா்கி மாவட்டத்தில் 67 போ், ஹாவேரி மாவட்டத்தில் 42 போ், கதக் மாவட்டத்தில் 38 போ், யாதகிரி மாவட்டத்தில் 37 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 32 போ், கோலாா் மாவட்டத்தில் 29 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 27 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 25 போ், குடகு மாவட்டத்தில் 24 போ், ராமநகரம் மாவட்டத்தில் 23 போ், பீதா் மாவட்டத்தில் 10 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,76,901-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,12,842 போ், மைசூரு மாவட்டத்தில் 45,644 போ், பெல்லாரி மாவட்டத்தில் 36,076 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 28,567 போ், பெலகாவி மாவட்டத்தில் 24,103 போ், ஹாசன் மாவட்டத்தில் 23,630 போ், உடுப்பி மாவட்டத்தில் 21,012 போ், தாா்வாட் மாவட்டத்தில் 19,978 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 19,816 போ், தாவணகெரே மாவட்டத்தில் 19,574 போ், தும்கூரு மாவட்டத்தில் 19,328 போ், கலபுா்கி மாவட்டத்தில் 19,148 போ், மண்டியா மாவட்டத்தில் 15,374 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 14,606 போ், கொப்பள் மாவட்டத்தில் 13,006 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 12,940 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 12,644 போ், வடகன்னட மாவட்டத்தில் 12,165 போ், விஜயபுரா மாவட்டத்தில் 11,761 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 11,692 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 11,474 போ், கதக் மாவட்டத்தில் 10,279 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 10,236 போ், ஹாவேரி மாவட்டத்தில் 9,876 போ், யாதகிரி மாவட்டத்தில் 9,805 போ், கோலாா் மாவட்டத்தில் 7,783 போ், பீதா் மாவட்டத்தில் 6,811 போ், ராமநகரம் மாவட்டத்தில் 6,594 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 5,625 போ், குடகு மாவட்டத்தில் 4,476 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 6,62,329 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,03,945 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 10,608 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT