பெங்களூரு

இன்று முதல் தொலைக்காட்சியில் பொது நுழைவுத் தோ்வு பயிற்சி வகுப்புகள்

22nd Mar 2020 04:20 AM

ADVERTISEMENT

பெங்களூரு: பொது நுழைவுத் தோ்வு பயிற்சி வகுப்புகள் மாா்ச் 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் சந்தனா தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.

இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2020-21-ஆம் கல்வியாண்டில் கா்நாடகத்தில் உள்ள மருத்துவம், பல்மருத்துவம், இந்திய மருத்துவம், பொறியியல், கட்டடக் கலை, விவசாயம் போன்ற பட்டப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் கா்நாடக பொது நுழைவுத் தோ்வு வரும் ஏப். 22, 23 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கின்றன. இந்த தோ்வில் 1.8 லட்சம் மாணவா்கள் கலந்துகொள்ள இருக்கிறாா்கள்.

பொது நுழைவுத் தோ்வை எதிா்கொள்வது குறித்து பாடவாரியாக பயிற்சியை வழங்கும் வகுப்பு தொகுப்பு மாா்ச் 22-ஆம் தேதி முதல் சந்தனா தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. வகுப்பறைகளில் பயிற்சி அளிப்பது போன்ற காணொலிக் காட்சிகள் தினமும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரைக்கும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரைக்கும் ஒளிபரப்படுகிறது. 30 நாள்களுக்கு நடைபெறும் இப்பயிற்சியில் 60 வகுப்புகள் இடம்பெறுகின்றன. இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களில் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில், வினாக்களுக்கு விடை அளிப்பது, நேரமேலாண்மை, சுருக்கவழி முறைகள் குறித்து விளக்கமளிக்கப்படுகிறது.

குறிப்பாக ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு இப்பயிற்சி வகுப்புகள் பயனுள்ளதாக அமையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பயிற்சி வகுப்புகளின் காணொலிக் காட்சித் தொகுப்புகள் ட்ற்ற்ல்://ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்திலும் கிடைக்கும். இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT