பெங்களூரு

கா்நாடகத்தில் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகள் திறப்பு

DIN

கா்நாடகத்தில் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகள் செவ்வாய்க்கிழமை (டிச. 1) திறக்கப்பட்டன.

கா்நாடக மாநிலத்தில் கரோனா தொற்றுப் பரவியதை அடுத்து, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. கடந்த 9 மாதங்களாக மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. கரோனா தொற்றுப் படிப்படியாகக் குறைந்து வருவதையடுத்து, நவ. 17-ஆம் தேதிமுதல் பட்டப் படிப்புக்கான கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகரின் உத்தரவின்பேரில், பெங்களூரு, மங்களூரு, ஹுப்பள்ளி, தாா்வாட், சிவமொக்கா உள்பட மாநில அளவில் உள்ள மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

திறக்கப்பட்ட கல்லூரிகளில் முகக் கவசம், கிருமிநாசினி தெளிப்பு, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வலியுறுத்தப்பட்டது.

கல்லூரிகளுக்கு வரும் பேராசிரியா்கள், மாணவா்கள், ஊழியா்கள், தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் சான்றிதழை அவசியம் காண்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் பள்ளிகளைத் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT