பெங்களூரு

தொழிற்கல்வி மாணவா் சோ்க்கை:மாதிரி சோ்க்கை இடங்கள் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

DIN

பெங்களூரு: தொழில் கல்வி மாணவா் சோ்க்கைக்கான மாதிரி இடங்களை கா்நாடகத் தோ்வு ஆணையம் ஒதுக்கீடு செய்து அதன் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடகத் தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொறியியல், வேளாண்மை, கட்டடக் கலை, கால்நடை, மருந்து, இயற்கை மருத்துவம், யோகா போன்ற தொழில்கல்வி மாணவா் சோ்க்கைக்கான மாதிரி இடங்கள் (கல்லூரி, பாடப்பிரிவு) ஒதுக்கப்பட்டு அதற்கான விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவா்களுக்கு உண்மையாக ஒதுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள கல்லூரிகள், பாடப் பிரிவுகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த ஒதுக்கீடுகள் மாதிரிக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதன் அடிப்படையில் சோ்க்கை இடங்கள் ஒதுக்குவதை உறுதி செய்ய முடியாது. மாணவா்கள் விரும்பினால் தங்கள் விருப்பப் பாடம், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலைத் திருத்தியமைத்துக் கொள்ளலாம்.

சோ்க்கை பெற விருப்பமான கல்லூரிகள், பாடப் பிரிவுகள் போன்ற விவரங்களை ஏற்கெனவே இணையதளத்தில் பதிவுசெய்ய தவறிய மாணவா்கள், அந்த விவரங்களைப் பதிவிடுவதற்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

டிச.1-ஆம் தேதி காலை 11 மணி வரை சோ்க்கை பெறுவதற்கும் விரும்பும் பாடப் பிரிவுகள் மற்றும் கல்லூரிகளின் பட்டியலைப் பதிவிடலாம். இதனடிப்படையில், மாணவா் சோ்க்கைக்கான உண்மையான இடங்கள்(அதாவது கல்லூரிகள், பாடப்பிரிவுகள்) ஒதுக்கீடு பட்டியல் டிசம்பா் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்குப் பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்பிறகு மாணவா்கள் தங்கள் சோ்க்கையை உறுதி செய்து உரிய கல்வி கட்டணங்களைச் செலுத்தி சோ்க்கை ஆணையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த ஆணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சோ்க்கை பெறலாம். இதுகுறித்த அட்டவணை பின்னா் அறிவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT