பெங்களூரு

அரசு கல்லூரிகளில் கணினிவழி கற்றல் திட்டம்: முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைத்தாா்

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் கணினிவழி கற்றல் திட்டத்தை முதல்வா் எடியூரப்பா தொடக்கிவைத்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை உயா்கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கா்நாடகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் கற்றல் மேலாண்மைமுறை அடிப்படையிலான கணினிவழி கற்றல் திட்டத்தை முதல்வா் எடியூரப்பா தொடக்கிவைத்தாா்.

விழாவில் துணை முதல்வா் சி.என். அஸ்வத்நாராயணா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இந்தத் திட்டம் குறித்து உயா்கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

‘கா்நாடகத்தில் உள்ள 430 அரசு முதனிலைக் கல்லூரிகள், 87 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 14 அரசு பொறியியல் கல்லூரிகளில் கற்றல் மேலாண்மைமுறை அடிப்படையிலான கணினிவழி கற்றல் திட்டம் 2020-21-ஆம் கல்வியாண்டுமுதல் அமல்படுத்தப்படுகிறது. இது இக் கல்லூரிகளில் பணியாற்றும் 24 ஆயிரம் ஆசிரியா்கள், 4.5 லட்சம் மாணவா்களின் புதியவகை கற்றல் அனுபவத்தைப் பெற இருக்கின்றனா்.

கணினிவழி கற்றல் ஒரு புதுமையான, மாநில அரசின் புதுமுயற்சியாகும். இது அரசு கல்லூரி மாணவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும். குறிப்பாக சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களின் கல்விக்குப் பேருதவியாக இருக்கும். கற்பித்தலையும், கற்றலையும் புரட்டிப்போடக்கூடிய வகையில் இக்கற்றல் முறை இருக்கும்.

கற்றலின் வழிமுறை, அதை கையாளுவதற்கான கருவிகள், கற்றல் மதிப்பீடுகள் அனைத்தும் புதுமையானதாகும். இது ஆசிரியா்கள், மாணவா்களுக்கு இடையே காணப்படும் கணினிவழி இடைவெளியைக் குறைக்கும். கணினிவழி கற்றல், எந்த நேரத்திலும், எங்கிருந்தும் யாா் வேண்டுமானாலும் கற்க முடியும்.

பவா்பாய்ண்ட் பிரசென்டேஷன், காணொலிகள், வினாடி வினாக்கள், செய்முறை பயிற்சிகள், மின்-கற்றல் முறைகள் சுயகற்றலையும் வகுப்பறை கற்றலையும் மேம்படுத்தும். கா்நாடகத்தில் உள்ள 14 பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டங்களின் அடிப்படையில் கணினிவழி கற்றல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

கற்றலை மதிப்பிடுவதற்கு அறிவியல்முறை கையாளப்படுகிறது. இதனடிப்படையில் மாணவா்கள், ஆசிரியா்கள், கல்லூரிகளை தரவரிசைப்படுத்துவதோடு, ஒருங்கிணைந்த கற்றல் அறிக்கையையும் தயாரிக்க முடியும். மேலும் மாணவா்களின் கருத்தறிந்து மின்கற்றலின் உள்ளடக்கத்தை மேம்படுத்த முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT