Year Ender

2021-இல் சுற்றுலாத்துறையில் கரோனா பாதிப்பின் தாக்கம்!

ஆர். வெங்கடேசன்


கரோனா தொற்று காரணமாக 20 மாத மூடலுக்குப் பிறகு நவம்பர் 15, 2021 அன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதியை இந்தியா மீண்டும் திறந்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனா தொற்று குறைவாக இருப்பதால், தடுப்பூசி விகிதங்கள் அதிகரித்து வருவதால், இந்தியா தனது எல்லைகளை வெளிநாட்டு சுற்றுலாப் பணிகளுக்கான அனுமதியை நவம்பர் 15, 2021 அன்று மீண்டும் திறந்தது, இதையடுத்து 20 மாத மூடலை முடிவுக்குக் கொண்டுவந்தது. 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுற்றுலா விசாவை நிறுத்திய பிறகு, இந்தியா இப்போது 99 பரஸ்பர நாடுகளிலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லாத அனுமதியை வழங்கியது. அத்தகைய சுற்றுலாப் பயணிகள் வருகைக்குப் பிறகு 14 நாள்களுக்கு அவர்களின் உடல்நிலையை மட்டுமே கண்காணிக்க வேண்டும் என்று அரசு கூறியது. விமானங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் முதல்  வணிக விமானங்களில் வருபவர்களுக்கான அனுமதியை இந்திய அதிகாரிகள் விரிவுபடுத்தினர்.

ஒரு நாளைக்கு 4,00,000க்கும் அதிகமான நோய்த்தொற்று விகிதங்களைத் கடந்த பின்னர், இரண்டாவது கரோனா அலை தீவிரம் குறைந்ததால், சமீபத்திய வாரங்களில் பல இந்தியர்கள் ஏற்கனவே மேற்குக் கடலோர மாநிலமான கோவா மற்றும் மலைகள் நிறைந்த வடக்கு போன்ற உள்நாட்டு சுற்றுலா மையங்களுக்குச் சென்று வருகின்றனர். 

நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளியைக் கொண்டாட குடும்பங்களுடன் சென்று வந்தனர். புதிய வழக்குகள் ஒரு நாளைக்கு 8 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளன. ஒரு பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதன் மூலம், இந்தியாவின் நோய்த்தடுப்பு பிரசாரமும் வேகமெடுத்துள்ளது, மேலும் பெரும்பாலான இந்தியர்கள் ஏற்கனவே தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய வாரங்களில் தேசிய நோய்த்தொற்று அளவுகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடைசியாகக் காணப்பட்டத்தில் அளவில் குறைந்த அளவைத் தொட்டிருந்தாலும், கட்டுப்பாடுகளை தளர்த்துவது இந்தியா தனது இரண்டு பெரிய அலைகளுக்கு இடையில் ஒரு வீழ்ச்சியை அனுபவித்ததைப் போன்ற ஒரு மனநிறைவை ஏற்படுத்தும் என்ற கவலைகள் உள்ளன. 

கட்டுப்பாடுகளைக் குறைப்பது பயணங்கள் மற்றும் சுற்றுலாத் துறையை "மிக நல்ல நிலையில் வைக்கிறது" என்று இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்ரேஷன் லிமிடெட்டின் சுற்றுலா மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குநர் ரஜனி ஹசிஜா தெரிவித்தார். இருப்பினும், "மூன்றாவது அலையின் ஆபத்து இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை." என்ற எச்சரிக்கையையும் நினைவூட்டினார். 

இந்த உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து டிசம்பர் 3 ஆம் தேதி வெளிநாட்டினர் வருகைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், சுற்றுலாத் துறையானது கிறிஸ்துமஸ் ஏமாற்றத்தை தந்தாலும் 2022 புத்தாண்டை பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை அடுத்து 2020 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் இந்தியாவின் பயணம் மற்றும் சுற்றுலா ஹோட்டல் துறை ஒரு ரோலர்-கோஸ்டர் சவாரியில் உள்ளது. 

தற்போது உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தல் சுற்றுலாத்துறை மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.  ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், 'தொற்று ஆபத்து உள்ள' நாடுகளில் இருந்து வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தல் உள்பட தொடர்ச்சியான தடைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் தாக்கத்தால் தில்லியில், பயணங்கள் ரத்து 20-30 சதவீதம் அதிகரித்துள்ளதாக பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் டிராவல் ஏஜென்சி யாத்ரா அறிக்கையின்படி, இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளின் புதிய முன்பதிவுகளில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறுகிறது. மேலும் முன்பு செய்யப்பட்ட முன்பதிவுகளில் சுமார் 15 சதவிகிதம் ரத்து செய்யப்பட்டுள்ளன. "பல சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை குறித்த விளக்கங்களை தொடர்பு கொண்டு கேட்டு வருகின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைச் சுற்றிப் பயணிக்கத் திட்டமிட்டிருந்த பயணிகளின் கவலை அதிகரித்துள்ளது" என்று யாத்ரா ஆன்லைன் டிராவல் ஏஜென்சி நிர்வாகி கூறினார். 

உலக சுகாதார நிறுவனம், உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவும் என்று கூறுகிறது, இதனால் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாட்டை மீண்டும் அதிகரிக்த்துள்ளது மத்திய அரசு.

இந்த நிலையில், புதிய மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவுக்குள் நுழையும் சர்வதேச பயணிகளுக்கான புதிய விதிகளை மத்திய அரசு நவம்பர் 30 ஆம் தேதி வெளியிட்டது. 

இங்கிலாந்து உள்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளையும், தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய 10 நாடுகளையும் 'ஆபத்தில் உள்ள' நாடுகளாக மத்திய அரசு வகைப்படுத்தியது. 

கடந்த சில வாரங்களில் கரோனா தொற்று வழக்குகளின் அதிகரிப்பு மற்றும் புதிய ஒமைரான் தொற்றின் வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஒமைக்ரான் பரவலை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது, மேலும் வழக்குகளின் தீவிரம் அதிகரிக்கும் போது 'ஆபத்தில்' உள்ள நாடுகளின் பட்டியலை புதுப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சுற்றுலாத் துறைக்கான கண்ணோட்டம் எவ்வாறாயினும், சர்வதேச ரத்துகளின் அதிகரிப்பு இருந்தபோதிலும், பெரும்பாலான பயண முகவர்களும், ஆன்லைன் பயண முகவர்களும் புதிய முன்னேற்றங்கள் மற்றும் புதிய மாநிலங்களுக்கு இடையேயான வழிகாட்டுதல்கள், சில ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பு மற்றும் அதன் விளைவாக பொதுமுடக்கம் ஆகியவை இதுவரை உள்ள நம்பிக்கையை கலைக்காது என்று நம்புகின்றன.

"புதிய வழிகாட்டுதல்கள் பயணத் திட்டங்களைப் பாதிக்கக்கூடும் என்றாலும், பயணத்திற்கான வலுவான தேவை இன்னும் இருப்பதால், தொழில்துறை பெரிய தாக்கத்தை எதிர்பார்க்கவில்லை" என்று ஈஸ்மைடிரிப் இணை நிறுவனர் பிரசாந்த் பிட்டி கூறினார்.

மேலும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு சீசனுக்காக உள்நாட்டிலும் சர்வதேசப் பயணிகளிடமிருந்தும் முன்பதிவு செய்வதில் தொழில்துறை மிகப்பெரிய எழுச்சியைக் கண்டதாகவும், உள்நாட்டுப் பயணிகளிடம் பயணங்களை ரத்துசெய்யும் போக்கு இல்லை.

"இந்தியாவின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் தடுப்பூசி போடப்பட்டு வருவதால், பயண உணர்வு இன்னும் வலுவாக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம், மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் வரும் மாதங்களில் ஓய்வுப் பயணத்தைத் தொடருவோம். இதற்கிடையில், நாம் விழிப்புடனும் கவனமாகவும் இருக்க வேண்டும். சூழ்நிலை பாதுகாப்பானதாக இருக்கும் பட்சத்தில் சர்வதேச பயணத்தில் சகஜநிலையை காண்போம் என்று நம்புகிறோம்,” என்று பிட்டி மேலும் கூறினார்.

அதேபோல், இந்தியாவிற்குள் வரும் சர்வதேச விமானங்களுக்கான புதிய முன்பதிவுகள் கடந்த சில நாள்களாக, ரத்து செய்யப்பட்டதில் குறிப்பிடத்தக்க போக்கு எதுவும் காணப்படவில்லை என்று கிளீற்றிப் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி பிரஹலாத் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

"எங்கள் வாடிக்கையாளர்களும் தங்கள் பயணத் திட்டங்களில் இந்த விதிமுறைகளின் தாக்கத்தைப் புரிந்து கொள்ள எங்களை அணுகியுள்ளனர். மாறுபாடு அடைந்து ஒமைக்ரான் தீவிரத்தை இன்னும் விரிவாகப் புரிந்துகொள்ளும் வரை இது தொடரும் என்று எதிர்பார்க்கிறோம். பாதிப்பு கடுமையாக இருந்தால், அது சர்வதேச பயணத்தில் மீள்வதில் தாமதம் ஏற்படலாம்,” என்று கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

“மக்கள் இன்னும் திட்டங்களை ரத்து செய்யவில்லை. நாங்கள் அனைவரும் காத்திருந்து பார்க்கிறோம், ”என்று இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் தலைவர் ஜோதி மயல் கூறினார், இரண்டு ஆண்டுகள் காத்திருந்த பிறகு மக்கள் பயணங்களை ரத்து செய்ய தயங்குவார்கள் என்று நம்புவதாக கூறினார். 

தில்லியில் உள்ள டிராவல் முகவர்கள், கடந்த வாரத்தில் இந்தியாவுக்குப் பயணம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து விசாரணைகள் குறைந்துள்ள நிலையில், உள்நாட்டுப் பயணிகள் இன்னும் திட்டங்களை ரத்து செய்யத் தொடங்கவில்லை என்று தெரிவித்தனர்.

"வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் சில பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை காண முடிகிறது. ஆனால் உள்நாட்டு சந்தையில் தேவை வலுவாக உள்ளது. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ”என்று தில்லியை தளமாகக் கொண்ட வெல்க்ரோ டிராவல்ஸின் நிர்வாகி கூறினார். 

ஸ்கைலிங்க் டிராவல்ஸ் நிர்வனத்தின் மற்றொரு நிர்வாகி கூறுகையில், இந்தியாவில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் திருமண நிகழ்ச்சிகளின் உச்சமாக கருதப்படுகிறது. அரசாங்கத்தால் இதுவரை எந்த கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படாததால், பெரும்பாலான திருமணங்கள் மற்றும் திருமணங்களைச் சுற்றியுள்ள பயணத் திட்டங்கள் ரத்து செய்யப்படவில்லை.

வெளிநாடு செல்ல விரும்பும் இந்தியர்களுக்கான அவுட்லுக்
விடுமுறைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள இந்தியர்களின் முன்பதிவுகள் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாத் துறையை அச்சுறுத்தும் ஒமைக்ரான்
ஒமைக்ரானின் தாக்கம் சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பதில் அஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது சுற்றுலா மற்றும் ஹோட்டல் தொழில்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளாகும். சமீபத்தில், வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் அதிக தடுப்பூசி எண்ணிக்கையில் சரிவைத் தொடர்ந்து, இந்தத் துறைகள் மீண்டும் துளிர்க்கத் தொடங்கின, இருப்பினும், ஒமைக்ரான் பயம் சுற்றாலத்துறையில் உள்ளவர்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, பல சுற்றுலாப் பயணிகள் தங்கள் ஹோட்டல் அறை முன்பதிவுகளை ரத்து செய்தனர். 

சுற்றுலாவின் உச்சக் காலம்
சுற்றுலாத் துறையின் பங்குதாரர்களின் கூற்றுப்படி, டிசம்பர் 15 முதல் ஜனவரி 5 வரையிலான காலகட்டம் சுற்றுலாவின் உச்சக் காலமாகும். இருப்பினும், இப்போது ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகள் வராமல் போகலாம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். 

மைசூரு மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சி நாராயண கவுடா கூறியதாவது: சுற்றுலாத் துறைக்கு, காலம் மிகவும் முக்கியமானது. "கடந்த இரண்டு நாள்களில், சுமார் 30 சதவிகிதம் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50 சதவிகிதம் குறைந்துள்ளது," என்று அவர் கூறினார்.

“சரிபார்க்கப்படாத தகவல்கள் சுற்றுலாத் துறைக்கு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்,'' என்றார். 

மைசூரு டிராவல்ஸ் அசோசியேஷன் கௌரவத் தலைவர் பி.எஸ் பிரசாந்த் இதேபோன்ற அச்சத்தை தெரிவித்தார். "இந்த உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பாதிப்பால்  பலர் தங்கள் வெளிநாட்டு பேக்கேஜ் பயணங்களை ரத்து செய்து வருறார்கள். சரிபார்க்கப்படாத தகவல்கள் பரப்பப்படுவதால், தொற்றின் பாதிப்பின் விளைவை நாங்கள் காண்பதாக, ”என்று அவர் கூறினார்.

குடகில் சுற்றுலாத்துறை சரிவையோ அல்லது ரத்து செய்வதையோ காணவில்லை என்றாலும், ஒமைக்ரான் மாறுபாடு தோன்றியதிலிருந்து, சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ய பயப்படுகிறார்கள். கூர்க் ஹோம்ஸ்டே அசோசியேஷனின் பி ஜி அனந்தசயனா, ரத்து செய்யப்படவில்லை என்று கூறினார். 

"இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் எங்களுக்கு அழைப்புகள் வருகின்றன. ஒமைக்ரான் தொற்று பாதிப்பால்  மக்கள் பீதியடைந்துள்ளனர்,” என்றார். 

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் பழைய மைசூரு பகுதி சுற்றுலாவிற்கு பெயர் பெற்றது என்பதை நினைவு கூரலாம், ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் வழக்கமான வாழ்க்கையிலிருந்து ஓய்வு எடுக்க இங்கு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

எச்சரிக்கையான நம்பிக்கை ஆண்டு 2022: 
தொற்றுநோய் இருந்தபோதிலும், பல இடங்களில் கோடை காலம் நன்றாகவே சென்றது. ரிசார்ட்களும் ஒரு மென்மையான பருவத்திற்கு தயாராகி வருகின்றன, ஆனால் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதுடன், தற்போது ஒமைக்ரான் பாதிப்பும் அதிகரித்து விரட்டி வருகிறது. 

இதனால் பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தி வருகின்றன. உதாரணமாக, இஸ்ரேல் இனி சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை; பிரிட்டன் ஜெர்மனியால் தொற்று பாதிப்பு பகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் நெதர்லாந்து ஜனவரி இறுதி வரை நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. 

உச்சகட்ட முன்பதிவு காலத்தில் பொதுவாக பயணத்தைத் திட்டமிடும் பலர், தங்கள் விருப்பங்களை தெரிவிக்க விரும்புகிறார்கள். இது ஆண்டு முழுவதும் தொடரும் ஒரு போக்கு. "பயணத்தின் போது அதிக அளவு நெகிழ்வுத்தன்மையையும் தன்னிச்சையையும் காட்ட வேண்டும்" என்று முனிச் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுலா ஆராய்ச்சியாளர் மார்கஸ் பில்மேயர் கூறுகிறார். 

விடுமுறைக்கு வருபவர்கள் நிச்சயமற்ற நிலையில் கடைசி நிமிடத்தில் முன்பதிவு செய்கிறார்கள். இதனால் ஏற்கனவே நலிவடைந்து வரும் சுற்றுலாத் துறைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு ஆண்டிற்கு வருவாய் இழப்பு ஏற்படும். வரவிருக்கும் ஆண்டை தொழில்துறை எவ்வாறு பார்க்கிறது என்று ஜெர்மன் பயண சங்கத்திடம் கேட்டால், பதில் "எச்சரிக்கையுடன் நம்பிக்கை தரும் ஆண்டாக இருக்கும்." என்கிறார்கள். 

தொற்றுநோயின் முதல் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021 "தெளிவான மறுமலர்ச்சியைக் கண்டுள்ளது" என்று டிஆர்வி செய்தித் தொடர்பாளர் கூறினார். இருப்பினும், ஒமைக்ரான் தொற்று பரவலானது பல பயணிகளை குழப்பமடையச் செய்வதோடு, 2022-க்கு முன்பதிவு செய்வதற்கான தயக்கத்தை காட்டுவதற்கும் வழிவகுக்கிறது.

விடுமுறைக்கு முன்பதிவு செய்பவர்கள் குறுகியகால அறிவிப்பில் அவ்வாறு செய்கிறார்கள். ஜெர்மனியின் மிகப்பெரிய டூர் ஆப்ரேட்டர்களும் இதை உறுதி செய்துள்ளனர். ஆயினும், 2022 கோடை மாதங்களில் "பெரும்பாலும் இயல்பாக்கப்பட்ட முன்பதிவு நிலை" அடையும் என்று எதிர்பார்க்கிறது. மத்தியதரைக் கடல் பகுதியில் பாரம்பரியமாக பிரபலமான விடுமுறை இடங்களான பலேரிக் தீவுகள், கிரீஸ் மற்றும் துருக்கி போன்றவை ஏற்கனவே தேவையில் உள்ளன. ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவை பிரபலமாக உள்ளன டியுஐ தெரிவித்துள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்ததைப் போலவே, உள்நாட்டு விடுமுறைகளும் ஜெர்மனியில் முக்கிய பங்கு வகிக்கும். உள்நாட்டு சுற்றுலாத் துறையும் குறுகிய கால கட்டுப்பாடுகள் மற்றும் அரசியல் முடிவுகளுடன் தொடர்ந்து போராடுவதாக  சுற்றுலா ஆராய்ச்சியாளர் பில்மேயர் கூறுகிறார். "பொதுவான நிலைமைகள் தொழில்துறைக்கு தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்துவதாக," பில்மேயர் கூறுகிறார். 

நீண்ட தூர பயணம் கடினமாக உள்ளது
மேலும் நீண்ட தூரம் செல்ல விரும்புபவர்கள் இன்னும் பெரிய தடைகளை அடிக்கடி சந்தித்து வருகிறார்கள். பல நாடுகள் கட்டுப்பாடுகளைத் தொடர்கின்றன, ஒமைக்ரான் காரணமாக தாய்லாந்து போன்ற சில நாடுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துகின்றன. 

தாய்லாந்து நவம்பர் தொடக்கத்தில் வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வருபவர்களுக்கு அதன் எல்லைகளை மீண்டும் திறந்தது, ஆனால் இப்போது சுற்றுலாப் பயணிகள் மீண்டும் தனிமைப்படுத்தலுக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் விடுமுறைக்கு வருபவர்களை அனுமதிக்கவில்லை. மறுபுறம், அமெரிக்கா அல்லது மாலத்தீவுகள் போன்ற பிற பிரபலமான இடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கும் விரைவில் கட்டுப்பாடுகள் வரக்கூடும்.  

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று வர, விடுமுறைக்கு வருபவர்கள் அதிகளவில் பேக்கேஜ் டூர்களை முன்பதிவு செய்து வருகின்றனர் அல்லது பயண முகவர்கள் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். டியுஐ போன்ற முக்கிய டூர் ஆப்ரேட்டர்களும் நெகிழ்வான ரத்து கொள்கைகளை வழங்குகிறார்கள் மற்றும் விடுமுறைக்கு செல்லும் இடங்களில் தனிமைப்படுத்துவதற்காக ஏற்படும் சில செலவுகளை ஈடுசெய்கிறார்கள். 

உள்ளூர் அரசாங்கமும் சுற்றுலாத் துறையும் ஒமைக்ரானை எவ்வாறு கையாள்கின்றன என்பதைப் பொறுத்து விடுமுறை நாள்களில் எந்த நாடுகளுக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையை பயணிகள் பெற முடியும் என்று சுற்றுலா ஆராய்ச்சியாளர் பில்மேயர் கூறுகிறார்.

விடுமுறைக்கு வருபவர்களின் தடுப்பூசி நிலையும் முக்கியத்துவம் பெறுகிறது. கோஸ்டாரிகா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களை மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கின்றன.

ஜெர்மனிக்குள் பயணம் செய்ய விரும்புபவர்களும் தடுப்பூசி போட வேண்டும். நாட்டில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும், விடுமுறைக்கு வருபவர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தேவை உள்ளது. டிசம்பர் 28 முதல், ஜெர்மனியில் விதிகள் மேலும் கடுமையாக்கப்பட உள்ளன. உதாரணமாக, 10 பேர் மட்டுமே தனிப்பட்ட முறையில் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள். பொது தடுப்பூசி உத்தரவுக்கான சாத்தியக்கூறுகளும் விவாதிக்கப்படுகின்றன.

சுற்றுலாத் துறையில் பணியாளர்கள் இல்லை
ஜெர்மனியில் சுற்றுலாத் துறை எந்த அளவிற்கு முழு ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்குத் தயாராகிறது என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது. பல ஊழியர்கள் இப்போது தொழில்துறையில் இருந்து விடுவித்துக்கொண்டு சில்லறை அல்லது வாகனத் தொழிலுக்கு மாறியுள்ளனர். 

சுற்றுலா ஆராய்ச்சியாளர் பில்மேயரின் கூற்றுப்படி, நிலைமை வியத்தகு நிலையில் உள்ளது: “நாங்கள் இனி திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறையைப் பற்றி பேசவில்லை, ஆனால் ஊழியர்களின் பொதுவான பற்றாக்குறையைப் பற்றி பேசுகிறோம். டிஆர்வியின் சமீபத்திய கணக்கெடுப்பில், டூர் ஆப்ரேட்டர்களில் மூன்றில் இரண்டு பங்கு மற்றும் 50 சதவிகித டிராவல் ஏஜென்சிகள், தொழில்துறையை விட்டு வெளியேற முடிவு செய்ததால், தொற்றுநோய்களின் போது ஊழியர்களை இழந்ததாகக் கூறினர். இதனால் 60 சதவிகிதம் பேர் காலியிடங்களை நிரப்புவதில் சிக்கல் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஊடகங்கள் மற்றும் அரசியல் முடிவுகளால் தொழில்துறை அதன் நற்பெயருக்கு சேதத்தை ஏற்படுத்தியதால், மாற்றீட்டைக் கண்டுபிடிப்பது கடினம் என்று பில்மேயர் கூறுகிறார். 

புதிய தொழிலாளர்களை அதிக சம்பளத்துடன் மட்டுமே கவர்ந்திழுக்க முடியும் என்று சுற்றுலா ஆராய்ச்சியாளர் கூறுகிறார். எனவே விடுமுறைகள் அதிக விலைக்கு போகும் என்பதால் ஆள்சேர்ப்பு பிரசாரங்களும் அவசியம், தொற்றுநோய்க்கு முன்பு அவர்கள் ஏற்கனவே வாங்கிய சம்பளத்தை விட அதிகமாகும்" என்று பில்மேயர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

SCROLL FOR NEXT