சுவடுகள்

தலைப்புச் செய்தியானவர்கள்..

DIN


கரோனா அது பிறந்தது முதலே தலைப்புச் செய்தியாகவே இருந்து வருகிறது. பல லட்சக்கணக்கான உயிர்களுடன் ஒரு முழு ஆண்டையும் பலிவாங்கிவிட்டு இன்னும் தீராத பசியோடு உலகம் முழுவதையும் வேட்டையாட அலைந்து கொண்டிருக்கிறது.

ஆனால், இந்த கரோனா படுத்தியபாட்டால் ஏராளமானோர் தலைப்புச் செய்தியாக மாறினார்கள். தங்கள் பிள்ளையைக் காக்க, மனைவியை காப்பாற்ற, தாய்க்காக, சேய்க்காக என்று எத்தனையோ கதாநாயகன்களையும் கதாநாயகிகளையும் இந்த கரோனா அடையாளம் காட்டியது.

அதில்.. நம்மால் மறக்க முடியாத சில கதாநாயகர்களின் உண்மைச் சம்பவங்கள் இதோ..

கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரி: புற்றுநோய் சிகிச்சைக்காக மனைவியை சைக்கிளில் அழைத்து வந்த முதியவர்
 
ஊரடங்கு சட்டத்தால் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டதால் புற்றுநோய் பாதித்த தன் மனைவிக்கு சிகிச்சை அளிக்க, கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற முதியவரின் செயல் நெகிழ வைத்திருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன், வயது 65. இவரது மனைவி மஞ்சுளா (60) புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். மஞ்சுளாவுக்கு நோய் முற்றிய நிலையில் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்க வேண்டும். அதனால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர்.

அதனால் தனது மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று நினைத்த முதியவர் அறிவழகன், துணிந்து அந்த முடிவை எடுத்தார்.

தன்னிடம் இருந்த பழைய சைக்கிளில் மனைவி மஞ்சுளாவை புதுச்சேரிக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு எத்தனை கிலோமீட்டர்? எவ்வளவு நேரமாகும்? அவ்வளவு தூரம் சைக்கிளில் செல்ல முடியுமா? நம்மால் சைக்கிளை மிதிக்க முடியுமா? வழியில் பஞ்சராகிவிட்டால் என்ன செய்வது? காவல்துறையினர் இருப்பார்களே என எதைப்பற்றியும் யோசிக்கவில்லை முதியவர் அறிவழகன். அவரின் சிந்தனை அனைத்தும் தனது மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பது மட்டும்தான். இடுப்பில் கட்டிய வேட்டியுடன், தோளில் துண்டை மட்டும் போர்த்திக்கொண்டு மனைவியை சைக்கிளில் அமர வைத்த அறிவழகன், மாயவரம், சீர்காழி, சிதம்பரம், கடலூர் என 120 கிலோமீட்டர் தூரத்தை இரவு முழுவதும் கடந்து, விடியற்காலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

ஊரடங்கு காரணமாக, பொது போக்குவரத்து இல்லாத சூழ்நிலையில்,  காயமுற்ற தனது தந்தையை தில்லியில் இருந்து பிகாருக்கு சுமார் 1,200 கி.மீ. தூரம் சைக்கிளிலே அழைத்துச் சென்றிருக்கிறார் மகள் ஜோதி.

இந்த நெடுந்தூர சவாலான பயணம் குறித்து 15 வயதே ஆன ஜோதி கூறுகையில், 'தில்லியில் என் தந்தை ரிக்ஷா ஓட்டும் வேலை செய்கிறார். தற்போது ஊரடங்கு காரணமாக ரிக்ஷா உரிமையாளரிடம் அதனை ஒப்படைக்க வேண்டியதாயிற்று. மேலும், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. வீட்டு வாடகை கொடுக்கக் கூட பணமில்லை. அங்கு யாரும் எங்களுக்கு உதவி செய்யவில்லை. அப்போதுதான் ஊருக்குச் செல்லலாம் என்று முடிவு செய்து ஒரு லாரி டிரைவரிடம் பேசினோம். அவர், தர்பங்காவுக்கு அழைத்துச் செல்ல ரூ.6,000 கேட்டார். ஆனால், அவ்வளவு பணம் இல்லாததால் நாங்கள் ரூ. 500-க்கு ஒரு சைக்கிள் வாங்கி எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். 

பெங்களூருவில் மருத்துவமனையைத்தேடி 7 கிலோ மீட்டர் நடந்தே வந்த பெண்ணுக்கு ஒரு பல் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

கரோனா கால ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் அனைத்தும் மூடிக் கிடக்கின்றன. 

இந்த நிலையில், நிறைமாதக் கர்ப்பிணியான 18-லிருந்து 20 வயதுக்குள் இருக்கக் கூடிய ஒரு பெண், பேறுகாலம் நெருங்கிவிட்ட நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதி, அவருடைய கணவருடன் நடந்தே பெங்களூரு நோக்கி மருத்துவமனையைத் தேடிக்கொண்டு  சென்றுள்ளார்.


தெலங்கானாவைச் சேர்ந்த தாய் ஒருவர், 1,400 கி.மீ. தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணித்து ஊரடங்கால் வீட்டுக்கு வர முடியாமல் சிக்கிக் கொண்ட மகனை மீட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவின் நிஜாமாபாத்தைச் சேர்ந்தவர் ரஸியா பேகம். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சுமார் 1,400 கி.மீ. தூரம் பயணித்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிக்கிக் கொண்ட தனது மகனை மீட்டு வந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்புர் பகுதியில் இருந்து சைக்கிள் ஒன்றை திருடிச் சென்ற புலம்பெயர் தொழிலாளி, அதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிவைத்து விட்டுச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சைக்கிள் காணாமல் போன நிலையில், வீட்டைப் பெருக்கும் போது, இந்த மன்னிப்புக் கடிதம் அந்த வீட்டின் உரிமையாளருக்குக் கிடைத்துள்ளது. இது இன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஏதுமற்ற நிலையில், வேறு வழியில்லாமல் சைக்கிளை எடுத்துச் சென்றாலும், அதற்காக மன்னிப்புக் கேட்டிருக்கும் ஒரு புலம்பெயர் தொழிலாளியின் நேர்மை பலருக்கும் பிடித்திருக்கிறது.

தஞ்சாவூரிலிருந்து மதுரைக்கு சைக்கிளில் ஒற்றைக் காலில் மிதித்துக் கொண்டு மாற்றுத்திறனாளி திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.
ஒற்றைக் காலிலேயே சைக்கிளை மிதித்தபடி மதுரைக்குச் சென்றாா். தஞ்சாவூரிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்ட இவா் 165 கி.மீ. தொலைவில் உள்ள மதுரைக்கு இரவு சென்றடைந்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், பொது முடக்கம் காரணமாக பேருந்து இல்லாததால், சைக்கிளில் செல்கிறேன் என்றாா் அவா்.

சாதனை நாயகர்களுக்கு மத்தியில், பலருக்கும் சோதனை கொடுத்த இவரும் ஒருநாள் செய்தியாக மாறினார்.. காரணம் நீங்களே பாருங்கள்.

பிகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்படும் மையத்தில் ஒரே ஒரு புலம்பெயர் தொழிலாளி, காலையில் 40 சப்பாத்தியும், மத்தியத்துக்கு 10 தட்டு சாப்பாடும் சாப்பிடுவது அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பிகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் மட்டும் விநோதமாக ஒரு விஷயம் நடப்பதை அதிகாரிகள் கவனித்து வந்தனர். அங்கு தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையை விட, 10 நபர்கள் சாப்பிடும் அளவுக்கு உணவு அதிகமாகத் தேவைப்பட்டது. இது பற்றி ஆராய நேரில் ஒருநாள் சென்ற போது அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி காத்திருந்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து திரும்பிய 23 வயது புலம்பெயர் தொழிலாளி, மஞ்ச்வாரி தனிமைப்படுத்தும் மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தார். இவர் காலை உணவாக 40 சப்பாத்திகளையும், மதிய உணவுக்கு 10 தட்டு சாப்பாட்டையும் உண்பதாக தொடர்ந்து புகார் வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT