சுவடுகள்

ஐபிஎல் முதல் டி20 உலகக் கோப்பை வரை: 2021-ல் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள தொடர்கள்!

31st Dec 2020 05:08 PM | எழில்

ADVERTISEMENT

 

2020-ல் அதிக ஓய்வு எடுத்துக்கொண்ட இந்திய வீரர்களுக்கு 2021-ல் நிற்க நேரம் இருக்காது போல. ஒருநாள், டி20 ஆட்டங்களில் மட்டுமல்லாமல் ஏராளமான டெஸ்டுகளிலும் விளையாடுகிறது. ஒரே வருடத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 9 டெஸ்டுகளில் விளையாடவுள்ளதால் இந்த வருடம் நமக்குத் திகட்டத் திகட்ட கிரிக்கெட் ஆட்டங்கள் உண்டு என்பது நிச்சயம்

அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட கிரிக்கெட் தொடர்கள்

ஜனவரி முதல் மூன்று வாரங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீதமுள்ள இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது.

ADVERTISEMENT

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

3-வது டெஸ்ட், ஜனவரி 7 - 11, சிட்னி
4-வது டெஸ்ட், ஜனவரி 15-19, பிரிஸ்பேன்

இந்தியாவில் இந்தியா - இங்கிலாந்து தொடர் 

இந்தியா - இங்கிலாந்து தொடர்களுக்கான அட்டவணையை டிசம்பர் மாதம் வெளியிட்டது பிசிசிஐ.

2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - இங்கிலாந்து தொடர் முழுக்க சென்னை, ஆமதாபாத், புணே ஆகிய மூன்று நகரங்களில் மட்டுமே நடைபெறுகின்றன. கரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் வீரர்கள் இருக்க வேண்டியிருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடர், சென்னை மற்றும் ஆமதாபாத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இரு நகரங்களும் தலா இரு டெஸ்டுகளை நடத்துகின்றன. 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் முழுக்க ஆமதாபாத்தில் நடைபெறுகிறது. அதேபோல மூன்று ஒருநாள் ஆட்டங்களும் புணேவில் நடைபெறுகின்றன. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக ஆமதாபாத்தில் மோடேரா மைதானம் கட்டப்பட்டுள்ளது. இம்மைதானத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர முடியும்.

டெஸ்ட் தொடரின் முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் நடைபெறுகின்றன. முதல் டெஸ்ட் பிப்ரவரி 5, 2-வது டெஸ்ட் பிப்ரவரி 13 அன்று தொடங்குகின்றன. 3-வது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் பிப்ரவரி 24 அன்று தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் ஆமதாபாத்தில் மார்ச் 4 அன்று தொடங்குகிறது. 

ஆமதாபாத்தில் நடைபெறும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், மார்ச் 12 அன்று தொடங்கி மார்ச் 20-ல் முடிவடைகிறது. புணேவில் நடைபெறும் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 23-ல் தொடங்கி, மார்ச் 28-ல் முடிவடைகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக 2016-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் நடைபெற்றது. அதன்பிறகு இப்போதுதான் மீண்டும் டெஸ்ட் நடைபெறுகிறது. கரோனா அச்சுறுத்தலால் பல நகரங்களில் தொடரை நடத்த முடியாத காரணத்தால் சென்னைக்கு ஒரே தொடரில் இரு டெஸ்டுகள் கிடைத்துள்ளன.

சென்னை சேப்பாக்கம் மைதானம்

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட், சென்னை - பிப்ரவரி 5 - 9
2-வது டெஸ்ட், சென்னை - பிப்ரவரி 13 - 17
3-வது டெஸ்ட், ஆமதாபாத் - பிப்ரவரி 24 - 28
4-வது டெஸ்ட், ஆமதாபாத் - மார்ச் 4 - 8

டி20 தொடர் (ஆமதாபாத்)

முதல் டி20 - மார்ச் 12
2-வது டி20 - மார்ச் 14
3-வது டி20 - மார்ச் 16
4-வது டி20 - மார்ச் 18
5-வது டி20 - மார்ச் 20

ஒருநாள் தொடர் (புணே)

முதல் ஒருநாள் - மார்ச் 23
2-வது ஒருநாள் - மார்ச் 26
3-வது ஒருநாள் - மார்ச் 28

இங்கிலாந்தில் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

2021 ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இந்திய அணி இங்கிலாந்தில் ஐந்து டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணை கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

நாட்டிங்கம்-மில் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கும் டெஸ்ட் தொடர், செப்டம்பர் 14-ல் மான்செஸ்டரில் நிறைவடைகிறது.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட், ஆகஸ்ட் 4-8: நாட்டிங்கம்
2-வது டெஸ்ட், ஆகஸ்ட் 12-16: லார்ட்ஸ்
3-வது டெஸ்ட், ஆகஸ்ட் 25-29: லீட்ஸ்
4-வது டெஸ்ட்: செப்டம்பர் 2-6: தி ஓவல்
5-வது டெஸ்ட்: செப்டம்பர் 10-14: மான்செஸ்டர்

திட்டமிடப்பட்டுள்ள கிரிக்கெட் தொடர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் மார்ச் 28-ல் முடிவடைகிறது. இதன்பிறகு ஏப்ரல் தொடக்கத்தில் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளது. மே மாதம் வரை ஐபிஎல் நடைபெறும். 

இதன்பிறகு இலங்கையில் 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது.

ஜிம்பாப்வேயில் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. இதன்பிறகு இங்கிலாந்தில் 5 டெஸ்டுகளில் விளையாடுகிறது.

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.

டி20 உலகக் கோப்பை: அக்டோபர் - நவம்பர் மாதங்களில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 14 அன்று நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு இந்தியாவுக்கு வருகை தந்து 2 டெஸ்ட், 3 டி20 ஆட்டங்களில் நியூசிலாந்து அணி விளையாடுகிறது.

வருடக் கடைசியில் தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 3 டெஸ்ட், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 

Tags : 2021 india
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT