Year Ender 2020

விளையாட்டு 2020

DIN

ஜனவரி 

12    ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற செட்களில் சக நாட்டவரான ஜெஸ்ஸிகா பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் ஆனார். 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு செரீனா வென்ற முதல் பட்டம் இதுவாகும். 

13 "ஏசஸ் விருதுகள்' நிகழ்ச்சியில் விளையாட்டு பிரிவில் "2020-ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு நட்சத்திரம்' விருது பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கும், "வாழ்நாள் சாதனையாளர்' விருது முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவுக்கும் வழங்கப்பட்டது. 

18 டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸô ஹோபார்ட் இன்டர்னேஷனல் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை நாடியா கிசெனோக்குடன் இணைந்து சாம்பியன் ஆனார். இது மகப்பேறுக்குப் பிறகு அவர் வென்ற முதல் பட்டமாகும். 

29    நியூஸிலாந்துக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்ற டி20 தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா சூப்பர் ஓவர் முறையில் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா முழுமையாகக் கைப்பற்றியது. 

29    இந்திய கால்பந்து வீராங்கனைகளில் முதல் நபராக, வெளிநாட்டில் நடைபெறும் கால்பந்து போட்டிக்காக நகன்கோம் பாலா தேவி (29) ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஸ்காட்லாந்தின் ஸ்காட்டிஷ் ஜயன்ட் ரேஞ்சர்ஸ் எஃப்சி அணிக்காக 2 ஆண்டுகள் விளையாட அவர் ஒப்பந்தமானார். 

30    ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-6 (7/1), 6-4, 6-3 என்ற செட்களில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தினார். 

பிப்ரவரி 

1    ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் பிரிவில் அமெரிக்காவின் சோஃபியா கெனின் 4-6, 6-2, 6-2 என்ற செட்களில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருஸôவை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். 

2    ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 4-6, 2-6, 6-3, 6-4 என்ற செட்களில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபனில் 8-ஆவது பட்டத்தை வென்றார். மொத்தமாக இது அவரது 17-ஆவது கிராண்ட்ஸ்லாம். 

16    அமெரிக்காவில் நடைபெற்ற காய்ரன்ஸ் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் மகளிர் கிராண்ட் மாஸ்டர் கோனெரு ஹம்பி, சக நாட்டவரான துரோணவல்லி ஹரிகாவை கடைசி சுற்றில் டிரா செய்து சாம்பியன் ஆனார். 
21    மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, முத்தரப்பு தொடரின் இறுதி ஆட்டத்தில் அந்த அணியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது. 

26    டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா (32) அறிவித்தார். அவர் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்தார். . 

மார்ச் 

 5    டைம்ஸ் ஆஃப் இந்தியா விருதுகள் நிகழ்ச்சியில், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு "2020-இன் சிறந்த விளையாட்டு வீராங்கனை' விருதும், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சங் பூட்டியாவுக்கு "வாழ்நாள் சாதனையாளர்' விருதும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி நட்சத்திரம் பல்பீர் சிங்குக்கு "நூற்றாண்டின் அடையாளம்' விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். 

8    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் ஆனது. 

13    மார்ச் 29-ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக  ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. 

15    ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல் 6-11, 11-8, 12-10, 11-9, 3-11, 17-15 என்ற செட்களில் போர்ச்சுகீசிய வீரர் மார்கோஸ் ஃப்ரெய்டாûஸ வீழ்த்தி 10 ஆண்டுகளில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார். 

17    கரோனா சூழலை முன்னிட்டு "யுரோ 2020' கால்பந்து போட்டி 2021-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

24    டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கரோனா சூழல் காரணமாக 2021-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. முன்னதாக நடப்பாண்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெற இருந்த இப்போட்டி, 2021 ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடத்தப்படும் என்று மார்ச் 30-ஆம் தேதி அறிவித்தது. úஜூன்

ஏப்ரல்  

1    கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமானதை அடுத்து விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, 2-ஆம் உலகப் போர் காலகட்டத்துக்குப் பிறகு முதல் முறையாக ரத்து செய்யப்பட்டது. 

4    இந்தியாவில் நவம்பர் 2 முதல் 21 வரை நடைபெறுவதாக இருந்த 17 வயதுக்குள்பட்ட மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கரோனா சூழல் காரணமாக ஒத்திவைப்பதாக ஃபிஃபா அறிவித்தது. 
ஜூன் 

8    2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவின் மாதிரியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதற்கான தடயம் இருந்ததை அடுத்து, அவரது பதக்கம் பறிக்கப்பட்டதுடன் 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. 

9    குத்துச்சண்டை வீராங்கனை நீரஜ் போகாட் (57 கிலோ பிரிவு) ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (என்ஏடிஏ) அவருக்கு 2019 டிசம்பர் 2 முதல் 4 ஆண்டுகளுக்கு தடை விதித்தது.

ஜூலை 

4    இந்திய தடகள விளையாட்டு பயிற்சியாளர்களுக்கான ஊதிய உச்சவரம்பு ரூ.2 லட்சமாக இருந்ததை மத்திய விளையாட்டு அமைச்சகம் நீக்கியது. சிறப்பாகச் செயல்படும் பயிற்சியாளர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்க வழிவகை செய்தது. 

ஆகஸ்ட்

15    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி அறிவித்தார். எனினும் ஐபிஎல் போட்டியின் 13-ஆவது சீசனில் சென்னை அணிக்காக விளையாடினார். 

21    தமிழக தடகள வீரர் த. மாரியப்பன், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும், தடகள வீராங்கனை டூட்டி சந்த், கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா உள்ளிட்ட 27 பேருக்கு அர்ஜுனா விருதும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. 

29    கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக கேல் ரத்னா, அர்ஜுனா உள்ளிட்ட விருதுகள் முதல் முறையாக இணையவழியில் வழங்கப்பட்டு வீரர், வீராங்கனைகள் கெளரவிக்கப்பட்டனர். வழக்கமாக இந்த நிகழ்ச்சி குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும். 

செப்டம்பர்

13    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் அலெக்ஸôண்டர் வெரேவை 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 (6) என்ற செட்களில் வீழ்த்திய ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். அத்துடன் பல்வேறு சாதனைகளுக்கும் அவர் சொந்தக்காரர் ஆனார். 

13    அமெரிக்க ஓபன் மகளிர் பிரிவில் ஜப்பானின் நஜோமி ஒசாகா 1-6, 6-3, 6-3 என்ற செட்களில் பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவை வீழ்த்தி சாம்பியன் ஆனார். 

அக்டோபர் 

10    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து இளம் வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற செட்களில் அமெரிக்காவின் சோஃபியா கெனினை வீழ்த்தி, அந்தப் போட்டியில் சாம்பியன் ஆன இளம் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். 

11    பிரெஞ்சு ஓபன் டென்னிஸின் ஆடவர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6-0, 6-2, 7-5 என்ற செட்களில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் ஆனார். இது பிரெஞ்சு ஓபனில் அவரது 13-ஆவது பட்டம். 

11    ஜெர்மனியில் நடைபெற்ற ஐஃபில் கிராண்ட் ஃப்ரீ கார் பந்தயத்தில் சாம்பியன் ஆன பிரிட்டன் கார் பந்தய வீரர் லூயிஸ் ஹாமில்டன், ஃபார்முலா ஒன் பந்தயத்தில் 91 முறை வெற்றிகளை பதிவு செய்த மைக்கெல் ஷுமாக்கரின் சாதனையை சமன் செய்தார். 

நவம்பர் 

10    13-ஆவது ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் ஆனது. 
29    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் வென்ற ஆஸ்திரேலியா, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி ஆட்டத்தில் இந்தியா வென்றது. 

டிசம்பர் 

6    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் வென்ற இந்தியா, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்ற, கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வென்றது. சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த தமிழக வீரர் டி.நடராஜன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். 

7    பிரேக் டான்சிங், சர்ஃபிங், ஸ்கேட் போர்டிங், ஸ்போர்ட்ஸ் கிளைம்பிங் ஆகிய 4 போட்டிகள் புதிதாக 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டன. இதில் பிரேக் டான்சிங் டோக்கியோ ஒலிம்பிக்கிலேயே நடத்தப்படவுள்ளது. 

19    இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக விளையாடிய பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா தனது 2-ஆவது இன்னிங்ஸில், டெஸ்ட் வரலாற்றிலேயே முதல் முறையாக 36 ரன்களுக்கு சுருண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT