Year Ender 2020

தமிழ் சினிமா 2020

DIN

ஜனவரி

24 தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஷால் தரப்பு முடிவு செய்தது.
30 நடிகர் ராகவேந்திரா (75) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

பிப்ரவரி

10 வருமான வரித்துறை நடிகர் விஜய்யிடம் நடத்திய விசாரணை மற்றும் சோதனையால் சர்ச்சை எழுந்தது. எனினும், 36 மணி நேர விசாரணைக்குப் பின் நெய்வேலி என்.எல்.சியில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த தன் ரசிகர்களுடன் செல்ஃபியும் எடுத்தார். ""நன்றி நெய்வேலி'' என்று அந்த புகைப்படத்தை தன் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டார் விஜய்.

21 சினிமா தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி படப்பிடிப்பு தளத்தில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருப்பதாக பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

24 சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்துக்கு "அண்ணாத்த' என்று பெயரிடப்பட்டது.

மார்ச்

10 டிடிஎஸ் வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, பட விநியோகத்தை நிறுத்த தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் முடிவு செய்தது.

11 நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் பழைய வாக்குகளை எண்ணினாலும் சரி, புதிதாக தேர்தல் நடத்தினாலும் சரி, நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம் ஐசரி கணேஷ் அணி தெரிவித்தது.

13 ஆட்சி ஓரிடத்தில் கட்சி ஓரிடத்தில் என்ற ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டுக்கு இயக்குநர் பாரதிராஜா வரவேற்பு தெரிவித்தார்.

16 கரோனா தொற்று காரணமாக தமிழ்த் திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்து ரத்து செய்யப்படவுள்ளதாக பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்தார்.

26 நடிகர் சேது சென்னையில் காலமானார்

ஏப்ரல்

7 கரோனா நோய்ப் பாதிப்புக்கு நிவாரணமாக, நடிகர் அஜித் 1 கோடியே 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

மே

29. ஓ.டி.டி எனப்படும் இணையதள முறையில் முதன்முதலாக வெளியான தமிழ்த் திரைப்படம் என்ற சிறப்பை நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் பெற்றது.

ஜூன்

11 சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்த ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கத்தை நிரந்தரமாக மூட முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்தில் பெருமை வாய்ந்த ஏவி.எம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்தத் திரையரங்கமானது, அந்த நிறுவனத்துக்கு அருகிலேயே வடபழனி ஆற்காடு சாலையில் அமைந்திருந்தது.

ஜூன் 19. ஓ.டி.டி. தளத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் என்ற த்ரில்லர் படம் வெளியானது.

ஜூலை

7 நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் சம்பளத்தை 50 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. கரோனா பொது முடக்கத்தால் இந்த முடிவை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்தது.

8 கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கின.

10 "நாங்கள் வாழும் காலம் வரை கே.பாலசந்தரின் புகழ் வாழும்' என்று கமல்ஹாசன் தெரிவித்தார். கே. பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, வெளியிடப்பட்ட விடியோ ஒன்றில் கமல்ஹாசன் இதை தெரிவித்தார்.

ஆகஸ்ட்

28 "சூரரைப் போற்று' பட வெளியீட்டில் இருந்து பெப்சி அமைப்பின் நலத் திட்ட உதவிகள் உள்ளிட்ட திரை அமைப்புகளின் நலன்களுக்கு நடிகர் சூர்யா நிதி வழங்கினார்.

31 சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி தந்துள்ள தமிழக முதல்வருக்கு நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா நன்றி தெரிவித்தார்.

செப்டம்பர்

15 கரோனா தொற்று பாதிப்பால் நடிகர் ஃப்ளோரன்ட் பெரேரா (67) சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

16 கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள புது படத்தின் அறிவிப்பு வெளியானது. கமல்ஹாசனின் 232-ஆவது படமாக உருவாகவுள்ள இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

அக்டோபர்

14 கரோனா பொது முடக்க காலத்தில் படங்களை திரையிடுவதற்காக க்யூப் கட்டணம் டிசம்பர் மாதம் வரை பாதியாக குறைக்கப்பட்டது.

15 முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதை தவிர்க்குமாறு நடிகர் விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா வேண்டுகோள் விடுத்தார்.

19 சம்பளக் குறைப்பு தொடர்பாக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்தார்.

19 கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்திலிருந்து விலகினார் நடிகர் விஜய்சேதுபதி.

நவம்பர்

4 புதிய திரைப்படங்களை திரையிடுவது குறித்த பேச்சுவார்த்தை இரண்டாவது நாளாக சென்னையில் நடைபெற்றது.

21 தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.

22 தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தேர்வு செய்யப்பட்டார்.

டிசம்பர்

1 தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள புதிய நிர்வாகிகளுக்கு இயக்குநரும், நடப்புதயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான பாரதிராஜா வாழ்த்துதெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT