உலகம்

இந்திய தூதருக்கு குருத்வாராவில் அனுமதி மறுப்பு: பிரிட்டனிடம் விளக்கம் கேட்பு

30th Sep 2023 04:27 PM

ADVERTISEMENT


ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் இந்திய தூதருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்தியா விளக்கம் கேட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிடம், ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் நுழைய இந்திய தூதரை, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சீக்கிய ஆதரவாளர்கள் அனுமதி மறுத்ததன் பின்னணி குறித்து இந்தியா விளக்கம் கேட்டுள்ளது.

இதையும் படிக்க.. தேசிய நெடுஞ்சாலை பள்ளங்களுக்கு இனி இவர்கள்தான் பொறுப்பு!

பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, தன்னை குருத்வாராவுக்குள் சீக்கிய ஆதரவாளர்கள் அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக, அந்நாட்டு பிரதமர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இரு நாட்டு நல்லுறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் இந்த நிகழ்வு நேரிட்டுள்ளது.

ADVERTISEMENT

குருத்வாராவுக்குள் இந்திய தூதர் துரைசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து உடனடியாக ஸ்காட்லாந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, குருத்வாரா நிர்வாகிகள், இந்திய தூதர் துரைசாமியின் பாதுகாப்புப் பொறுப்பே ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, பிரிட்டன் வெளியுறவுத் துறையிடம் இந்தியா இது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறது.

என்ன நடந்ததோ அதில், குருத்வாரா நிர்வாகத்துக்கு மகிழ்ச்சியில்லை. எனினும், பிரிட்டனில் உள்ள எந்த குருத்வாராவிலும் இந்திய அதிகாரிகளுக்கு வரவேற்பு இல்லை என்று துரைசாமி குறிப்பிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT