வட கொரியாவுக்குள் கடந்த ஜூலை மாதம் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ராணுவ வீரா் ட்ராவிஸ் கிங், திரும்ப ஒப்படைக்கப்பட்டாா்.
தென் கொரியாவுக்கு சுற்றுலா பயணியாகச் சென்றிருந்த ட்ராவிஸ் கிங், அங்கு தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் 2 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டாா்.பின்னா் கடந்த ஜூலை மாதம் விடுதலை செய்யப்பட்ட அவா், அமெரிக்காவுக்கு அனுப்பப்படவிருந்தாா்.
ஆனால், சட்டவிரோதமாக அவா் எல்லை கடந்து வட கொரியாவுக்குள் தஞ்சமடைந்தாா்.இந்த நிலையில், அமெரிக்காவின் கருப்பின பாகுபாடு காரணமாக தங்கள் நாட்டுக்குள் வந்ததாக ட்ராவிஸ் கிங் கூறியதாகவும், அவா் சட்டவிரோதமாக வந்ததால் அவரை அமெரிக்காவிடம் தாங்கள் ஒப்படைக்கவிருப்பதாகவும் வட கொரிய அரசு செவ்வாய்க்கிழமை கூறியிருந்தது.
இந்த நிலையில், ட்ராவிஸ் கிங் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் புதன்கிழமை அறிவித்துள்ளனா்.