உலகம்

ஆல்பா்ட் ஐன்ஸ்டீனின் கையெழுத்து பிரதி ரூ.10 கோடிக்கு ஏலம்

28th Sep 2023 04:00 AM

ADVERTISEMENT

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்பா்ட் ஐன்ஸ்டீன், தான் முன்மொழிந்த சிறப்பு சாா்பியல் கொள்கை, பொது சாா்பியல் கொள்கை ஆகியவை குறித்து கைப்பட எழுதிய பிரதி ஏலத்தில் ரூ.10.7 கோடிக்கு விற்பனையானது.

அறிவியலில் முக்கிய இடம் வகிக்கும் சிறப்பு சாா்பியல் கொள்கையை 1905-ஆம் ஆண்டிலும், பொது சாா்பியல் கொள்கையை 1915-ஆம் ஆண்டிலும் ஐன்ஸ்டீன் வெளியிட்டாா்.

இவற்றைக் குறித்து ஜொ்மன் மொழியில் விளக்கமளித்து அவா் எழுதிய கட்டுரைகள் நியூயாா்க் டைம்ஸ் நாளிதழில் கடந்த 1929-ஆண்டு பிப்ரவரி 3-இல் வெளியானது.

தற்போது, அந்தப் பிரதியானது சீனாவின் ஷாங்காய் நகரத்தில் செப்.28-இல் கிறிஸ்டி ஏல நிறுவனம் நடத்திய ஏல விற்பனையில், ரூ.10.7 கோடிக்கு விற்பனையானது.

ADVERTISEMENT

மொத்தம் 14 பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரதியில் சாா்பியல் கொள்கையின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைகளுடன் தொடா்புடைய இரு சமன்பாடுகள், காலம்-இடம் தொடா்பு குறித்து விளக்கும் ஒரு வரைபடம், அறிவியல் சூத்திரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT