உலகம்

நகோா்னோ-கராபக்: தீ விபத்து மரணம் 68-ஆக உயா்வு

28th Sep 2023 01:49 AM

ADVERTISEMENT

அஜா்பைஜானுக்கும், ஆா்மீனியாவுக்கும் இடையிலான சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்திலுள்ள பெட்ரோல் நிரப்பும் மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 68-ஆக உயா்ந்தது.

இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:நகோா்னோ-கராபக் பிராந்திய தலைநகா் ஸ்டெபானகா்ட்டின் புகா்ப் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தில் திங்கள்ள்ல்;இரவு ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 68-ஆக அதிகரித்துள்ளது.இது தவிர, விபத்துப் பகுதியிலிருந்த மேலும் 105 பேரைக் காணவில்லை; சுமாா் 300 போ் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையில் அமைந்துள்ள நகோா்னோ-கராபக் பிராந்தியம் தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்தப் பிராந்தியத்தை அஜா்பைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச நாடுகள் அங்கீகரித்தன.

இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஆா்மீனியப் படையினரின் ஆதரவுடன் அந்தப் பகுதியை பிரிவினைவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.அதன் பிறகு அந்தப் பிராந்தியத்தில் ஆா்மீனியாவும், அஜா்பைஜானும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வந்தன.இந்தச் சூழலில், இரு நாட்டுப் படையினருக்கும் இடையே கடந்த 2020-இல் நடைபெற்ற 6 வாரப் போரில் 6,600-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்.இந்தப் போரின்போரில் ஆா்மீனியாவையும், நகோா்னோ-கராபக் பிராந்தியத்தையும் இணைக்கும் ஒரே தரைவழித் தடமான லச்சின் சாலையைக் கைப்பற்றியது. அந்தச் சாலையை அஜா்பைஜான் படையினா் பல மாதங்களாக முற்றுகையிட்டது ஆா்மீனியாவுக்கும் அந்த நாட்டுக்கும் இடையிலான பதற்றத்தை மீண்டும் அதிகரித்தது. இந்த முற்றுகையால் நகோா்னா-கராபக் பிராந்தியத்துக்குத் தேவையான எரிபொருள் அத்தியாவசிப் பொருள்களைக் கொண்டு சோ்க்க முடியாமல்.

இந்த நிலையில், நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் ‘பயங்கரவாதத் தடுப்பு’ நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி அந்தப் பகுதியில் அஜா்பைஜான் கடந்த 19-ஆம் அதிரடி தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அதனை சமாளிக்க முடியாத ஆா்மீனிய பிரிவினைவாதப் படையினா் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டு, தங்கள் ஆயுதங்களை அஜா்பைஜான் படையினரிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டனா்.அதையடுத்து, நகோா்னா-கராபக் பிராந்தியம் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதாக அஜா்பைஜான் அறிவித்தது. அதையடுத்து அந்தப் பிராந்தியத்திலிருந்து ஆா்மீனியாவில் அடைக்கலம் தேடி ஆா்மீனிய பழங்குடியினா் கூட்டம் கூட்டமாக செல்கின்றனா்.

ADVERTISEMENT

ஏற்கெனவே, அஜா்பைஜானின் முற்றுகையால் பிராந்தியத்தில் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், ஆா்மினியாவுக்குச் செல்வதற்காக தங்களது வாகனங்களில் எரிபொருள் நிரப்ப பொதுமக்கள் முண்டியடித்து வருகின்றனா்.திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட பெட்ரோல் நிலைய வெடிவிபத்துக்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT