உலகம்

பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப திட்டங்களை வகுக்க கிரீஸ் முடிவு!

27th Sep 2023 08:10 PM

ADVERTISEMENT

பருவநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக உருவாகியுள்ளதாக கிரீஸ் நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

மத்திய கிரீஸ் கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் சாலைகள் சேதமடைந்துள்ளன. வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், கிரீஸின் எவியா தீவு மின்சாரமின்றி தவித்து வருகின்றது. சாலைகளை சீரமைக்கும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிக்க: ஆசிய விளையாட்டுப் போட்டி: ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற 13 வயது சிறுமி!

இது தொடர்பாக பேசிய கிரீஸ் நாட்டின் பிரதமர் கூறியதாவது: பருவநிலை மாற்றத்துக்கு நாம் கவனம் கொடுக்க வேண்டும். பருவநிலை நெருக்கடிகளுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொள்வது அவசியம். பருவநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு நாம் திட்டங்களை வகுப்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக மாறியுள்ளது என்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT