உலகம்

சோகத்தில் முடிந்த திருமணம்: தீ விபத்தில் 100 பேர் பலி; பலர் படுகாயம்!

27th Sep 2023 08:36 AM

ADVERTISEMENT

இராக்கில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 100 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு இராக், நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில், திருமண மண்டபத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் கட்டடத்தின் கூரைகள் அங்காங்கே இடிந்து விழுந்ததில் தீ வேகமாக பரவியுள்ளது.

இதையும் படிக்க | நகோா்னோ-கராபக் பெட்ரோல் நிலையத்தில் வெடிவிபத்து: 20 போ் பலி

இதனால் மண்டபத்தைவிட்டு வெளியேற முடியாமல் 100-க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தீ விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

முதல்கட்ட விசாரணையில் திருமண நிகழ்வின்போது வெடித்த பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், உயர்நிலைக் குழு விசாரணைக்கு ஈராக் அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : iraq wedding
ADVERTISEMENT
ADVERTISEMENT