உலகம்

ராட்டினத்தில் கோளாறு: 75 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கிய மக்கள்!

26th Sep 2023 02:37 PM

ADVERTISEMENT

கனடாவில் உள்ள கேளிக்கை பூங்காவின் ராட்டினத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 75 அடி உயரத்தில் தலைகீழாக மக்கள் தொங்கிய சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வாகான் நகரில் கனடா வொண்டர்லேண்ட் என்ற கேளிக்கை பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் லம்பெர்ஜேக் எனப்படும் 360 டிகிரி கோணத்தில் சுற்றக்கூடிய ராட்டினம் உள்ளது. இந்த ராட்டினத்தில் 48 பேர் ஒரே நேரத்தில் விளையாடலாம்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு 10.40(உள்ளூர் நேரம்) மணியளவில் மக்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு 75 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கியபடி நின்றதால் மக்கள் அச்சத்தில் கூச்சலிடத் தொடங்கினர்.

உடனடியாக தொழில்நுட்ப ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு ராட்டினத்தில் இருந்த கோளாறு சரிசெய்யப்பட்டது. சுமார் 25 நிமிடங்களுக்கு பிறகு 11.05 மணியளவில் ராட்டினத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | தமிழில் உரையாடிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி!

இதில், இருவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து பூங்கா நிர்வாகம் உடனடியாக சிகிச்சை அளித்தது. மீதமுள்ள மக்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த விபத்தை தொடர்ந்து கேளிக்கை பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT