உலகம்

சிங்கப்பூரில் கண்டெடுக்கப்பட்ட 2-ம் உலகப் போர் குண்டு!

25th Sep 2023 01:14 PM

ADVERTISEMENT

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத 100 கிலோ எடையுள்ள வெடிகுண்டு சிங்கப்பூர் அகழ்வாராய்ச்சி தளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அப்பர் புக்கித் திமா என்ற பகுதியில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சி தளத்தில் கடந்த 25-ஆம் தேதி 100 கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்கப்பூர் ஆயுதப் படையின் வெடிகுண்டு அகற்றும் குழுவினர், அந்த குண்டை ஆராய்ந்தனர்.

இதில், இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத குண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த குண்டை போர் நினைவுச் சின்னத்துக்கு எடுத்துச் செல்வது பாதுகாப்பற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, அந்த பகுதியிலேயே செவ்வாய்க்கிழமை காலை குண்டை அழிக்கும் பணியை மேற்கொள்ள வெடிகுண்டு அகற்றும் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க | பிரதமரின் போபால் பேரணிக்குச் சென்ற தனியார் பேருந்து விபத்து: 39 பேர் காயம்!

இதனால், குண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்புப் பகுதி மக்களை பாதுகாப்பு காரணத்துக்காக வேறு இடத்துக்கு மாற்றியுள்ளனர்.

மேலும், கடைகள், அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை காலை 11 மணிமுதல் இரவு 7 மணிவரை குண்டு அகற்றும் பணி நடைபெறவுள்ளதால், அப்பகுதிகளில் சாலையும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT