உலகம்

பூமியில் பகல் - இரவு சமநிலையில் இருக்கும் ஆச்சரிய விடியோ..

25th Sep 2023 01:23 PM

ADVERTISEMENT


பூமியின் மீது சூரியனின் ஒளி சரி பாதியாகபட்டு, பகல் - இரவு சமநிலையில் இருக்கும் விடியோவை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான ஈஎஸ்ஏ வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி உத்தராயண காலம் தொடங்குகிறது என்று ஈஎஸ்ஏ-வின் எக்ஸ் பதிவில் விடியோ அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

ஒரு செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்ட அந்த விடியோவில், பூமியின் மேற்பரப்பில், சூரியனின் ஒளி சரி பாதியாக படுவது தெளிவாக பதிவாகியிருக்கிறது.

 

ADVERTISEMENT

ஈக்வினாக்ஸ் என்றால், சூரியன் நேரடியாக பூமத்திய ரேகைக்கு மேல் தோன்றுவதால், பூமியில் பகல் - இரவு சம நிலையில் ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடியோவை பகிர்ந்திருக்கும் ஈஎஸ்ஏ, குளிர்காலம் வரப்போகிறது. பூமி பகல் - இரவு என சரி பாதியாக இன்று பிரிகிறது என்று விளக்கம் கொடுத்திருக்கிறது.

இது குறித்து ஸ்பேஸ்.காம் இணையதளத்தில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், பூமியின் வடக்கு அரைகோளப் பகுதியில் இலையுதிர் காலம் தொடங்குகிறது.  அதாவது வடக்கு துருவத்தில் இருக்கும் ஒரு சில நாடுகளில் 6 மாத காலம் தொடர்ந்து இரவு நேரமாக இருக்கும் காலம் தொடங்குகிறது. தெற்கு அரைகோளத்தில் வசந்த காலம் தொடங்குகிறது. அதாவது, தெற்கு துருவத்தில் இருக்கும் ஒரு சில நாடுகளில் தொடர்ந்து இரவாக இருந்த 6 காலம் நிறைவுற்று முழுவதும் பகல் காலம் தொடங்குகிறது. தற்போது சூரியன் தென் திசையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க..கரோனாவைவிட கொடூரமான வைரஸ்.. எச்சரிக்கும் சீன வைராலஜிஸ்ட்

மேலும், இந்த நிகழ்வை லத்தீன் மொழியில் "சம இரவு" என்று அழைக்கிறார்கள், இது உலகம் முழுவதும் பகலும் இரவும் சமமான நீளம் கொண்டதாக இருப்பதைக் குறிக்கிறது. ஆனால், மிகத் துல்லியமாக சமமாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்றும் கூறப்படுகிறது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT