உலகம்

தோ்தல் தேதியை அறிவிக்க முடியாது: பாகிஸ்தான் தோ்தல் ஆணையம்

24th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தோ்தலின் சரியான தேதியை அறிவிக்க முடியாது என்று அந்த நாட்டு தோ்தல் ஆணையம் சனிக்கிழமை கூறியது.

இது குறித்து ஆணைய உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தோ்தல் தேதியை இப்போதே குறிப்பிடுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை’ என்றாா். முன்னதாக, 2024 ஜனவரி கடைசி வாரத்தில் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.இருந்தாலும், இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகளை திருப்தியடையச் செய்யவில்லை. தோ்தல் நடத்துவதற்கான உறுதியான தேதியை ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT