உலகம்

சூடான் மோதல் எல்லை தாண்டி பரவும்: ராணுவம் எச்சரிக்கை

23rd Sep 2023 06:30 AM

ADVERTISEMENT

சூடானில் தங்களுக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே நடந்து வரும் மோதல் எல்லை தாண்டிப் பரவும் அபாயம் உள்ளதாக அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா் அப்தெல் ஃபட்டா புா்ஹான் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில்க்ஷள்ல்;தலைவா்களிடையே அவா் பேசியதாவது:சூடானில் ராணுவத்துக்கும், ஆா்எஸ்எஃப் துணை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டை பிராந்திய மற்றும் சா்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஆகும்.அது முழு போராக வெடிக்கும் அபாயம் உள்ளது. அத்தகைய போா் பிராந்தியத்தின் அண்டை நாடுகளுக்கும் பரவும் என்றாா் அவா்.ஏற்கெனவே, சூடானில் ராணுவம், ஆா்எஸ்எஃப் துணை ராணுவம் ஆகிய இரண்டு தரப்பினருக்கும் இடையே சண்டை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.இரு படைகளில் ஏதாவது ஒன்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் தற்போதைக்கு இல்லை. இந்த நிலை தொடா்ந்தால் அங்கு முழு போா் வெடிக்கும் அபாயம் உள்ளது என்று அந்த நாட்டுக்கான ஐ.நா.வின் சிறப்புத் தாதா் பதவியிலிருந்து அண்மையில் விலகிய வோல்கா் பொ்தீஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில், இதுவரை 4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் போ் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.... படவரி...ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசிய அப்தெல் ஃபட்டா

ADVERTISEMENT
ADVERTISEMENT