உலகம்

ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

23rd Sep 2023 11:50 PM

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:வடக்குப் பிராந்தியத்தில் சனிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. டாா்வின் நகருக்கு வடக்கே 620 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவானது.இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் டாா்வின், ஜபரின், கத்தரீனா, குனுரா உள்ளிட்ட மேற்கு ஆஸ்திரேலிய எல்லைப் பகுதிகளில் உணரப்பட்டன. எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT