உலகம்

அமெரிக்காவின் முதல் மகளிர் கல்லூரியிலேயே ஆண்களுக்கு அதிக ஊதியம்!

23rd Sep 2023 03:15 PM

ADVERTISEMENT


அமெரிக்காவில் தற்போது இருபாலரும் பயிலும் கல்லூரியாக இருக்கும் வாஸ்ஸர், ஊதியத்தில் பாலின வேறுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, கல்லூரியின் முன்னாள் பேராசிரியைகள் சிலர், நீதிமன்றத்தை நாடியுள்ளார். கல்லூரியிலும் போராட்டம் நடந்துள்ளது.

வாஸ்ஸர் கல்லூரி, அமெரிக்காவில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி என்ற பெருமையை பெற்றது, பெண்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கல்வியில் இரு பாலருக்குமான சமநிலையை அதிகரிக்கச் செய்ய பேருதவி புரிந்துள்ளது.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியைகளைக் காட்டிலும் பேராசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக, கடந்த மாதம், ஐந்து பேராசிரியைகள் நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஊதிய பேதத்தைத் தாண்டி, பெண் பேராசிரியைகளுக்கு பதவி உயர்வை தாமதிப்பது, திறமையை மதிப்பிடுவது என பலவற்றிலும் பாலின வேறுபாடு பார்க்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த வாரம், கல்லூரியில் பேராசிரியைகளுக்கும் ஒரே ஊதியம் வழங்குமாறு நூற்றுக்கணக்கான மாணவர்கள் குரல் எழுப்பினர். பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கான கல்லூரி என்பது, கலாசாரம், பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்திலும் தீவிரமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இதையும் படிக்க.. இந்த 7 உணவுகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிடக் கூடாதா?

இந்தக் குற்றச்சாட்டு குறித்து பல்வேறு தரப்பு மாணவர்களும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர். வாஸ்ஸர் கல்லூரியால் தாங்கள் ஏமாற்றமடைந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.

1969ஆம் ஆண்டு ஆண்டு முதல் இரு பாலினரும் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்ட வாஸ்ஸர், இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக பல விளக்கங்களை அளித்துள்ளது. கல்லூரி நிர்வாகமானது, தொடர்ந்து மற்றும் விடாமல், ஊதியம் வழங்குவதில் பாலின வேறுபாட்டைக் களைய தொடர்ந்து பாடுபாட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT