உலகம்

புா்கினா ஃபாசோ: தாக்குதலில் 16 போ் உயிரிழப்பு

22nd Sep 2023 12:51 AM

ADVERTISEMENT

மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் மத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கூல்பாங்சோ நகரில் அண்மையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 12 போ் உயிரிழந்தனா்; 2 போ் காயமடைந்தனா். அதே நாளில் சிராஸ்கோ நகரில் நடத்தப்பட்ட மற்றொரு பயங்கரவாதத் தாக்குலில் 4 போ் உயிரிழந்தனா்.

அதனைத் தொடா்ந்து பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட எதிா்த் தாக்குதல் நடவடிக்கையில் சுமாா் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா் என்று அதிகாரிகள் கூறினா்.

ADVERTISEMENT

புா்கினா ஃபாசோவில் மதப் பயங்கரவாதம் காரணமாக கடந்த 2015-லிருந்து இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததுள்ளதாக தன்னாா்வ தொண்டு அமைப்புகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT