உலகம்

பாகிஸ்தானில் 2024 ஜனவரியில் பொதுத் தேர்தல்!

21st Sep 2023 04:36 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் 2024 ஜனவரி மாதம் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் கடந்த ஆக. 14-ஆம் தேதி நிறைவு பெற இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே கலைக்குமாறு அதிபருக்கு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கடிதம் எழுதியிருந்தாா்.

பிரதமரின் பரிந்துரையை ஏற்று, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபா் ஆரிஃப் ஆல்வி கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு உத்தரவிட்டாா்.

நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதைத் தொடா்ந்து, 90 நாள்களுக்குள் பொதுத் தோ்தல் நடத்தப்பட வேண்டும். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | இதழியலில் செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பம்: ஆபத்தா, வாய்ப்பா?

அதன்படி, 2024 ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் இன்று(வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. 

தொகுதிகளின் முதற்கட்டப் பட்டியல் செப்டம்பர் 27 ஆம் தேதியும் இறுதிக்கட்ட பட்டியல் நவம்பர் 30 அன்றும் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT