ஈரானில் பெண்கள் ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் மசோதா அந்த நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானில் பெண்கள் வெளியே செல்லும்போது ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயமாக உள்ளது. எனினும் அங்கு ஹிஜாப்புக்கு எதிராக குரல்கள் வலுத்து வருகின்றன.
கடந்த ஆண்டு ஹிஜாப் அணியாத இளம் பெண் ஒருவர் காணாமல் போன நிலையில் பின்னர் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில் ஈரான் அரசு, பெண்களின் ஆடைக் கட்டுப்பாட்டுக்காக ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
இதையும் படிக்க | 1952 முதல் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு?
அதன்படி, ஈரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணியாமல் சென்றால், ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் 5 முதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும், அத்துடன் இந்திய மதிப்பில் ரூ. 3.5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.