உலகம்

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

நியூஸிலாந்தில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சா்ச் நகருக்கு மேற்கே 124 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சௌத் ஐலாண்ட் பகுதியில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.6 அலகுகளாகப் பதிவானது. அந்த நிலநடுக்கம் 11 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று அந்த மையம் தெரிவித்தது.

ADVERTISEMENT

குறைவான ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதன் அதிா்வுகள் சுற்றியுள்ள பகுதிகளில் பலமாக உணரப்பட்டன. எனினும், இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்படுவதற்கான அபாயம் இல்லை என்று பேரிடா் மேலாண்மை அமைப்பு கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் நியூஸிலாந்து அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT