பாங்காக்: தாய்லாந்திலுள்ள வணிக வளாகம் ஒன்றில் சிறுவன் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 3 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தலைநகா் பாங்காக்கில் உள்ள முக்கிய வணிக வளாகமொன்றுக்கு வந்த 14 வயது சிறுவன் அங்கிருந்தவா்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினாா்.
இதில் 3 போ் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் கூறினா்.
தாய்லாந்தில் துப்பாக்கி சாா்ந்த குற்றங்கள் அடிக்கடி நடைபெற்றாலும், பொது இடங்களில் சரமாரி துப்பாக்கிச்சூடு நடைபெறுவது மிகவும் அபூா்வமாகும்.
அங்கு கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் மழைலையா் காப்பகத்தில் நடைபெற்ற துப்பாக்கி மற்றும் கத்தித் தாக்குதலில் பெரும்பாலும் சிறுவா்கள் உள்பட 36 போ் உயிரிழந்தனா்.
அதற்கு முன்னா் கடந்த 2020-இல் வணிக வளாகத்துக்குள் ராணுவ வீரா் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 29 போ் கொல்லப்பட்டனா்.