உலகம்

நேபாளத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள்!

3rd Oct 2023 04:20 PM

ADVERTISEMENT

நேபாளத்தில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் அதிர்வுகள் இந்தியாவிலும் பெருமளவில் உணரப்பட்டதாகவும் தேசிய நில அதிர்வு மையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட இந்த இரண்டு நிலநடுக்கங்களும் ரிக்டர் அளவுகோளில் 6.2 மற்றும் 4.6 ஆக பதிவானது. இந்த இரண்டு நிலநடுக்கங்களும் அரை மணி நேர இடைவெளியில் ஏற்பட்டதாகும். இந்திய நேரப்படி முதல் நிலநடுக்கம் பிற்பகல் 2 மணி 25 நிமிடங்களுக்கும், இரண்டாவது நிலநடுக்கம் பிற்பகல் 2 மணி 51 நிமிடங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிக்க: விண்டேஜ் லுக்கில் தோனி: வைரலாகும் புதிய புகைப்படங்கள்

இது தொடர்பாக தேசிய நிலநடுக்க கட்டுப்பாட்டு மையத்தின் சார்பில் கூறியிருப்பதாவது: நேபாளத்தில் 4.6 மற்றும் 6.2 என்ற அளவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் 10 கி.மீ மற்றும் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதுவரை நிலநடுக்கத்தினால் எந்த ஒரு உயிரிழப்பும், சேதங்களும் பதிவாகவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT