உலகம்

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு!

3rd Oct 2023 03:47 PM

ADVERTISEMENT

2023 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவா்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி (10 லட்சம் டாலா்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. 

2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் நேற்று (அக். 2) தொடங்கின. அதன்படி நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று(அக். 3) இயற்பியல் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | மருத்துவம்: அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

ADVERTISEMENT

அமெரிக்காவின் பியரே அகோஸ்தினி, ஜெர்மனியின் பெரென்க் க்ரவுஸ், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆனி ஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக வழங்கப்படுகிறது. 

அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளில் உள்ள எலக்ட்ரான்களின் இயக்கம் குறித்து இவர்கள் ஆய்வு செய்துள்ளனர். 

தொடர்ந்து அடுத்தடுத்த நாள்களில் மற்ற துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இதையும் படிக்க | அதிமுக- பாஜக மீண்டும் இணையலாம்: கிருஷ்ணசாமி பேட்டி

ADVERTISEMENT
ADVERTISEMENT