உலகம்

சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க விமானக் கட்டணத்தை குறைக்கும் பூடான்!

3rd Oct 2023 05:38 PM

ADVERTISEMENT

நாட்டில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக பூடான் நாட்டு அரசு அந்த நாட்டுக்கான விமானக் கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.

பூடான் நாட்டின் இந்த முடிவின் மூலம் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விமானக் கட்டணத்தைக் குறைக்கும் முடிவு மட்டுமின்றி சுற்றுலாத் துறையை மேம்படுத்த மேலும் பல நிர்வாக ரீதியிலான முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: நேபாளத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள்!

இது தொடர்பாக பூடானின் நிதித்துறை அமைச்சர் கூறியதாவது: பூடான் அரசின் இந்த முடிவின் மூலம் நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். விமானக் கட்டணம் அதிகமாக இருப்பது அவர்கள் சுற்றுலாவுக்காக பூடான் வருவதை தடுக்கும் விதமாக அமையும். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மேலும் பல நடவடிக்கைகளை அரசு எடுக்க உள்ளது என்றார்.

ADVERTISEMENT

பூடான் இதுபோன்று அடிக்கடி மாற்றங்களை கொண்டு வருவது அதன் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் என பலரும் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT